நாம் அனைவரும் களங்கம் இல்லாத சருமத்தைப் பெறவும், பிடிவாதமான கொழுப்பைக் குறைக்கவும், வயதான தோற்றத்தைப் பெறுவதை மெதுவாக்கவும், பல உடல்நலக் குறைபாடுகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் விரும்புகிறோம், அல்லவா? ஆம், நாம் அனைவரும் இதைத்தான் விரும்புகிறோம். நமது வாழ்க்கைமுறையை நாசம் செய்யும் பல விஷயங்கள் இருந்தாலும், நல்ல ஆரோக்கியத்திற்காக ஏங்குகிறோம், ஆரோக்கியமாக இருக்க கடுமையாக பாடுபடுகிறோம், இயற்கையான மற்றும் விரைவான தீர்வுகளை நம்பியிருக்கிறோம். அத்தகைய சக்திவாய்ந்த இயற்கை தீர்வுதான் அதிசய பானமான ABC ஜூஸ். இது ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மேலும், தினமும் குடிப்பதற்கு ஏற்ற ஆரோக்கியமான பானங்களில் ஒன்றாகவும் உள்ளது.
ABC miracle drink

இந்த அதிசய பானம் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அழகுக்கும் அதிசயங்களைச் செய்யும். ஏராளமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ABC ஜூஸ், நன்றாக உடற்பயிற்சி செய்த பிறகு அல்லது உங்கள் குடல் மற்றும் சரும ஆரோக்கியத்தை புதுப்பிக்க சிறந்த பானமாகும். இந்த மூன்று மூலப்பொருள் ஆரோக்கிய பூஸ்டரை வீட்டிலேயே ஒரு நொடியில் தயாரிக்கலாம், இந்த வண்ணமயமான பானத்துடன் உங்கள் நாளைத் தொடங்கலாம் அல்லது எந்த நேரத்திலும் அதை பருகலாம்.

ABC ஜூஸ் உங்களுக்கு மிகவும் அற்புதமான ஊட்டச்சத்தை வழங்குகிறது மற்றும் உங்கள் ஒட்டுமொத்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்த அதிசய பானம் முதன்முதலில் ஒரு சீன மூலிகை மருத்துவரால் நுரையீரல் புற்றுநோய் மற்றும் பல நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காகப் பல ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது, ​​அதன் சாத்தியமான ஆரோக்கிய நன்மைகளுக்காக உலகம் முழுவதும் பெரும் புகழைப் பெற்றுள்ளது.

ABC ஜூஸ் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்:

1 நடுத்தர அளவிலான கேரட்

1 நடுத்தர அளவிலான பீட்ரூட்

1 நடுத்தர அளவிலான ஆப்பிள்

1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு

½ கிளாஸ் தண்ணீர்

செய்முறை:

  • காய்கறிகள் மற்றும் பழங்களை கழுவி சுத்தம் செய்யவும்
  • அவற்றை தோலுடன் துண்டுகளாக நறுக்கவும்
  • அவற்றை ஒரு பிளெண்டரில் சேர்த்து நன்றாக கலக்க போதுமான தண்ணீர் ஊற்றவும்
  • சாற்றை வடிகட்டிக் கொள்ளவும்
  • எலுமிச்சை சாறுசேர்த்து, குளிர்வித்த பானத்தை பரிமாறவும்

இந்த பானத்தை எப்போது குடிக்க வேண்டும்?

அதன் ஊட்டச்சத்துக்களை முழுமையாகப் பெற தினமும் வெறும் வயிற்றில் இந்த அதிசய பானத்தை குடிக்கவும். காலையில் உங்கள் காலை உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இதை நீங்கள் குடிக்கலாம். இந்தப் பானத்தின் ஆரோக்கிய நன்மைகள் மெதுவாக வெளிப்படும். இது மிகவும் நன்மை பயக்கும், மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது மற்றும் வேறு எந்த சப்ளிமெண்ட்களையும் விட அதிக ஊட்டச்சத்தை வழங்குகிறது.

நம்பமுடியாத ஆரோக்கிய நன்மைகள்

ஊட்டச்சத்து நிறைந்தது

ABC பானம் என்பது உடலின் வளர்ச்சிக்கும் பழுதுபார்ப்புக்கும் தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அடங்கிய ஆரோக்கிய பானமாகும். ஒவ்வொரு மூலப்பொருளும் பானத்தின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கிறது மற்றும் உங்களுக்கு ஏராளமான சுகாதார நன்மைகளை வழங்குகிறது. இந்த சக்திவாய்ந்த பானம் வைட்டமின்கள் ஏ, பி1, பி2, பி6, சி, ஈ மற்றும் கே மற்றும் ஃபோலேட், துத்தநாகம், தாமிரம், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், சோடியம் மற்றும் மாங்கனீசு போன்ற அத்தியாவசிய தாதுக்களின் களஞ்சியமாகும்.

தோல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

வைட்டமின்கள் ஏ, சி, கே மற்றும் பி-காம்ப்ளக்ஸ் போன்ற ஊட்டச்சத்துக்களின் புதையல் உங்கள் சருமத்திற்கு ஊட்டமளிக்கும் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பண்புகளை வழங்குகிறது. இந்தப் பானம் உடலில் இருந்து நச்சுகள் மற்றும் அசுத்தங்களை வெளியேற்றி, உங்கள் சருமத்தை கறைகள் இல்லாமல், பளபளப்பாக, இளமையாக உணர வைக்கிறது. மேலும், நார்ச்சத்து மற்றும் பிற தாதுக்களின் நன்மை உடல் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது மற்றும் முக்கிய உறுப்புகளை புதுப்பிக்கிறது.

நல்ல பார்வை

கணினிகளைப் பயன்படுத்துவதை உள்ளடக்கிய வேலை காரணமாக உங்கள் கண்கள் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. இது கண் தசைகளின் சக்தியைப் பாதித்து, அவற்றை சோர்வாகவும் வறண்டதாகவும் மாற்றும். இந்த அதிசய பானத்தை குடிப்பதால் உங்கள் உடலுக்கு வைட்டமின் ஏ கிடைக்கிறது, இது கண் ஆரோக்கியத்தையும் பார்வையையும் மேம்படுத்துவதற்கு இன்றியமையாதது. ABC பானங்கள் கண் தசைகளின் வலிமையை மேம்படுத்துகின்றன, சோர்வடைந்த கண்கள் இளைப்பாற உதவுகின்றன மற்றும் கண்கள் வறண்டு போவதைத் தடுக்கின்றன.

அறிவாற்றல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

ABC பானம் மூளைக்கு ஊட்டமளிக்கும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது, அவை நாம் விரைவாகச் செயல்பட நரம்பு இணைப்புகளை மேம்படுத்துவதில் நன்மை பயக்கும். மேலும், இது கவனத்தையும் நினைவாற்றலையும் அதிகரிக்கிறது. இந்தப் பானத்தைத் தவறாமல் குடிப்பது ஒரு நபர் கூர்மையாக சிந்திக்கவும், புத்திசாலித்தனமாகவும் வேகமாகவும் வேலை செய்யவும் உதவுகிறது, இதன் மூலம் அனைத்து பணிகளையும் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும்.

நோய்களை எதிர்த்துப் போராடுகிறது

அதிசய பானத்தில் உள்ள ஆப்பிள், கேரட் மற்றும் பீட்ரூட்டின் சக்திவாய்ந்த கலவையானது வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குவதற்கும், காய்ச்சல், சளி மற்றும் ஆஸ்துமா போன்ற தொற்றுகளைத் தடுப்பதற்கும் மிகவும் பிரபலமானது. இது வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் உற்பத்தியை மேம்படுத்துகிறது, இதனால் இரும்புச்சத்து அளவை உயர்த்துகிறது மற்றும் இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்கிறது. இவை தவிர, இந்த அதிசய பானம் வாய் துர்நாற்றம் மற்றும் தொண்டை தொற்று ஆகியவற்றைக் குறைத்து நுரையீரலில் இருந்து சளியை நீக்குகிறது.

செரிமானத்திற்கு நல்லது

குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க ABC ஜூஸைக் குடிப்பது நல்லது. ஃபைட்டோநியூட்ரியன்ட்கள் மற்றும் நார்ச்சத்து செரிமான செயல்முறையை சீராக்குகிறது மற்றும் பொதுவான செரிமான பிரச்சினைகளுக்குச் சிகிச்சையளிக்கிறது. இது தவிர, இது வளர்சிதை மாற்றத்தைத் தூண்ட உதவுகிறது, குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் மலச்சிக்கலை சரிசெய்கிறது.

முடிவுரை

மிராக்கிள் பானம் அல்லது ABC ஜூஸ் என்பது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் ஊட்டச்சத்து நிறைந்தது. இது ஆப்பிள், கேரட் மற்றும் பீட்ரூட் உள்ளிட்ட மூன்று ஆரோக்கியமான பொருட்களின் கலவையாகும். ABC பானத்தின் வளமான ஊட்டச்சத்து விவரம் விரைவில் முதிர்ச்சியான தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கவும், பார்வையை மேம்படுத்தவும், நினைவாற்றலை அதிகரிக்கவும், பொதுவான தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. அதிசய பானத்தில் பக்கவிளைவுகள் எதுவும் இல்லை. அதன் ஆரோக்கிய நன்மைகளைப் பெற இந்த அற்புதமான பானத்தை உங்கள் உணவு முறையின் ஒரு பகுதியாகச் சேர்க்கவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நான் தினமும் ABC ஜூஸ் குடித்தால் என்ன நடக்கும்?

தினமும் ABC ஜூஸ் குடிப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இது ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் (A, B-காம்ப்ளக்ஸ், C, மற்றும் K), மற்றும் பொட்டாசியம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்களை மிகுதியாக வழங்குகிறது. வழக்கமான பயன்பாடு சரும பளபளப்பை மேம்படுத்தலாம், கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்கலாம், செரிமானத்திற்கு உதவலாம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். இருப்பினும், அதிகப்படியான சர்க்கரை அல்லது சாத்தியமான பக்க விளைவுகளைத் தவிர்க்க மிதமான அளவில் பருகுவது முக்கியமானது.

ABC மிராக்கிள் ஜூஸின் நன்மைகள் என்ன?

ABC மிராக்கிள் ஜூஸ் பல நன்மைகளை வழங்குகிறது:

  • கல்லீரலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.
  • தெளிவான மற்றும் பொலிவான சருமத்தை ஊக்குவிக்கிறது.
  • வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களுடன் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
  • பார்வை ஆதரவுக்காக பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் A நிறைந்துள்ளது.
  • பீட்ரூட் இரத்த சுத்திகரிப்புக்கு உதவுகிறது மற்றும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.

ABC ஜூஸ் பார்வையை மேம்படுத்துமா?

ஆம், ABC ஜூஸ் ஓரளவிற்கு பார்வையை மேம்படுத்த உதவும். கேரட் மற்றும் பீட்ரூட்டில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் A அதிகமாக உள்ளது, அவை கண் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை. வழக்கமான உட்கொள்ளல் சிறந்த இரவு பார்வையை ஆதரிக்கிறது மற்றும் வயதாகும்போது ஏற்படக்கூடிய மாகுலர் சிதைவின் அபாயத்தைக் குறைக்கலாம்.

ABC ஜூஸின் பலன்கள் தெரிய எவ்வளவு நேரம் ஆகும்?

உங்கள் ஒட்டுமொத்த உணவு மற்றும் வாழ்க்கை முறையைப் பொறுத்து, ABC ஜூஸ் குடிப்பதால் 2 முதல் 4 வாரங்களில் பலன்கள் தெரியக்கூடும். சரும பளபளப்பு மற்றும் செரிமான மேம்பாடுகள் சில நாட்களுக்குள் கவனிக்கப்படலாம், அதே நேரத்தில் மேம்பட்ட ஹீமோகுளோபின் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி போன்ற நன்மைகள் ஏற்பட அதிக நாட்களாகலாம்.

ABC ஜூஸ் வயிற்று வலியை ஏற்படுத்துமா?

ABC ஜூஸ் பொதுவாக பாதுகாப்பானது, ஆனால் சிலருக்கு வயிற்று அசௌகரியத்தை ஏற்படுத்தும், குறிப்பாக அதிக அளவில் அல்லது வெறும் வயிற்றில் உட்கொள்பவருக்கு இத்தகைய பிரச்சினைகள் ஏற்படும். பீட்ரூட் மற்றும் கேரட்டில் நார்ச்சத்து மற்றும் இயற்கை சர்க்கரைகள் அதிகம் உள்ளன, இது சிலருக்கு வாயு அல்லது அழற்சியை ஏற்படுத்தலாம்.

சருமத்திற்கு பீட்ரூட் நல்லதா?

ஆம், பீட்ரூட் சருமத்திற்கு சிறந்தது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது, இது இரத்தத்தை சுத்திகரிக்கவும் ஆரோக்கியமான பளபளப்பை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இதில் வைட்டமின் சி உள்ளது, இது கொலாஜன் உற்பத்தியை ஆதரிக்கிறது மற்றும் முகப்பருவைக் குறைக்க உதவுகிறது.

பொறுப்புத் துறப்பு:

உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.