கோடையில் நீண்ட விடுமுறைகளையும், சுற்றுலாவையும் பல வெளிப்புற செயல்பாடுகளையும் நாம் அனைவரும் எதிர்நோக்குகிறோம். ஆனால் வெப்பநிலை அதிகமாக இருப்பதால், நிறைய தண்ணீர் குடிப்பதும், உடலைக் குளிர்ச்சியாக வைத்திருப்பதும் அவசியம். நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிசெய்யவும், பருவக்காலத்தை முழுமையாக மகிழ்ச்சியுடன் அனுபவிக்கவும், கோடை தொடர்பான உடல்நல பிரச்சினைகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள எளிய குறிப்புகளை இங்கே நாங்கள் தொகுத்துள்ளோம்.
Summer health guide

கோடை காலத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான உடல்நல பிரச்சினைகள்:

  • வேர்க்குரு, வெப்ப வீக்கம், டெட்டனி, வெப்பப் பக்கவாதம் மற்றும் சோர்வு போன்ற வெப்பம் தொடர்பான உடல்நல பிரச்சினைகள்
  • நீரிழப்பு
  • உணவு நச்சேற்றம் என்பது வயிற்றுப் பிரச்சினைகள், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்குடன் தொடர்புடையது
  • சருமத் தொற்று, சூட்டு கொப்புளம், நிறமாற்றம் மற்றும் பொடுகு

நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிசெய்து, பருவகாலத்தை முழுமையாக அனுபவிக்க, கோடை தொடர்பான உடல்நலக் கவலைகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள எளிய குறிப்புகளை இங்கே தொகுத்துள்ளோம்.

ஆரோக்கியமாக இருப்பதற்கான பயனுள்ள குறிப்புகள்

நிறைய தண்ணீர் பருகுங்கள்

நீர்ச்சத்து குறைவு தலைச்சுற்றல், சோர்வு மற்றும் வெப்பப் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும். திரவ சமநிலையைப் பராமரிக்க தினமும் குறைந்தது 8-10 கிளாஸ் தண்ணீரைக் குடிக்க மறக்காதீர்கள். கூடுதலாக, தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சு போன்ற நீர் உணவுகளை உட்கொள்வது எலக்ட்ரோலைட்டுகளை நிரப்ப உதவுகிறது. அதிகப்படியான கேஃபின் கொண்ட பானங்கள் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை நீரிழப்புக்கு பங்களிக்கும்.

குறிப்பு: புத்துணர்ச்சியைப் பெற எலுமிச்சை, வெள்ளரி அல்லது புதினா இலைகளைத் தண்ணீரில் போட்டு குடிக்கவும்.

உங்கள் சருமத்தைப் பாதுகாக்கவும்

கோடை காலத்தில் சூட்டுக்கொப்புளம் மற்றும் சரும பாதிப்பு ஆகியவை முக்கிய பிரச்சினைகளாகும். புற ஊதா கதிர்கள் உங்கள் சருமத்தை சேதப்படுத்தும், இது இளம் வயதிலேயே வயதான தோற்றத்தைத் தரும், புற்றுநோயைக்கூட ஏற்படுத்தும். எனவே, சூரிய ஒளியில் நீங்கள் எவ்வளவு குறைவாக இருந்தாலும், சன்ஸ்கிரீன் உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தில் ஒரு முக்கிய மூலப்பொருளாக இருக்க வேண்டும். SPF 30 அல்லது அதற்கு மேற்பட்ட சன்ஸ்கிரீன்களைத் தேர்ந்தெடுத்து, வெயில்படும் இடங்களில் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை தாராளமாகப் பயன்படுத்துங்கள். மேலும், SPF கொண்ட லிப் பாம் மூலம் உங்கள் உதடுகளைப் பாதுகாக்க மறக்காதீர்கள்.

நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்

நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக உண்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. தர்பூசணி, வெள்ளரிக்காய், ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு, பச்சை இலை காய்கறிகள் மற்றும் செலரி ஆகியவை நீரேற்றம் தரக்கூடியவை. மேலும் இதில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள் நிரம்பியுள்ளன, அவை நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டி, தொற்றுநோய்களைத் தடுக்கின்றன.

புத்திசாலித்தனமாக உடை அணியுங்கள்

கோடை காலத்தில் சரியான ஆடைகள் மிகவும் பயனளிக்கும். பருத்தி, லினன் போன்ற தளர்வான, இலேசான துணிகளைத் தேர்வு செய்யுங்கள். இதனால், உங்கள் சருமம் வியர்வையை ஆவியாக்கும். மேலும், வெளிர் நிற ஆடைகள் சூரியனின் வெப்பத்தைப் பிரதிபலித்து, உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும். வெப்பத்தைத் தக்கவைக்கும் இறுக்கமான ஆடைகளைத் தவிர்க்கவும், காற்றோட்டத்தை அனுமதிக்கவும், உடல் வெப்பநிலையை பராமரிக்கவும் தளர்வான ஆடைகளைத் தேர்ந்தெடுக்கவும்.

 

வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் வீட்டிற்குள் இருங்கள்

வெயிலில் அதிகமாக இருப்பது வெப்ப சோர்வு மற்றும் வெயிலின் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும். பாதுகாப்பாக இருக்க, அதிகாலை அல்லது மாலை நேரங்களில் வெளிப்புற நடவடிக்கைகளைத் திட்டமிடுங்கள். நீங்கள் நீண்ட நேரம் வெளியே இருந்தால், நிழலில்  இருங்கள் அல்லது வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் (பொதுவாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை) வீட்டிற்குள் இருங்கள். நீங்கள் கடற்கரையில் இருந்தால், நேரடி சூரிய ஒளியில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு குடையை வைத்திருங்கள்.

சரியான சுகாதாரத்தைப் பின்பற்றுங்கள்

அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் பாக்டீரியா மற்றும் தொற்றுகளுக்கு சாதகமாகிவிடும். எனவே நல்ல சுகாதாரத்தைப் பராமரிப்பது முக்கியம், உங்கள் உடலைப் புத்துணர்ச்சியுடனும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்க வழக்கமாகக் குளிக்கவும். வெப்பம் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து விடுபட சுத்தமான ஆடைகளை அணியுங்கள் மற்றும் வியர்வை உள்ள ஆடைகளை உடனடியாக துவைக்கவும். தேவைப்படும் போதெல்லாம் பாக்டீரியா எதிர்ப்பு துடைப்பான்கள் அல்லது சானிடைசர்களைப் பயன்படுத்துங்கள்.

கவனமாக உடற்பயிற்சி செய்யுங்கள்

சுறுசுறுப்பாக இருப்பது முக்கியம், ஆனால் கோடை வெப்பம் உடற்பயிற்சிகளால் உடலைச் சோர்வடையச் செய்யலாம். பாதுகாப்பாக உடற்பயிற்சி செய்ய, உட்புற உடற்பயிற்சிகளைத் தேர்வு செய்யவும் அல்லது நீச்சல் மற்றும் யோகாவைத் தேர்வு செய்யவும். உச்ச வெப்ப நேரங்களில் தீவிரமான உடல் செயல்பாடுகளைத் தவிர்க்கவும். மேலும், உடற்பயிற்சிகளுக்கு முன், உடற்பயிற்சியின்போது மற்றும் உடற்பயிற்சிக்குப் பின் நிறைய தண்ணீர் குடிப்பது இழந்த திரவங்களை நிரப்ப உதவும்.

பொறுப்புத் துறப்பு:

உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.