கோடை காலத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்போது, உகந்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் நிலைநிறுத்துவதற்கு நீரேற்றமாக இருப்பது முக்கியமாகும். அதிகரித்துவரும் வெப்பத்தை எதிர்த்துப் போராட நீரேற்றமாக இருப்பதன் முக்கியத்துவத்தை மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். தர்பூசணி, முலாம்பழம், இளநீர், நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த இயற்கை உணவுகளைச் சாப்பிட அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சுட்டெரிக்கும் வெப்பத்தை வெல்ல ஒரு பாரம்பரிய வழி நுங்கு பால். இது நுங்கையும் பாலையும் சேர்த்து தயாரிக்கப்படும் புத்துணர்ச்சியூட்டும் மற்றும் ஆரோக்கியமான பானம். இந்தப் பானம் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமானது. இந்த இயற்கையான இனிப்பு மற்றும் குளிர்ச்சி நிறைந்த பானம் சுவை மொட்டுகளுக்கு ஒரு சுவையான விருந்தாக மட்டுமல்லாமல், உங்கள் கோடைகால உணவிற்கு ஏற்றதாகவும் இருக்கும்.
நுங்கு என்றால் என்ன?
ஆங்கிலத்தில் ஐஸ் ஆப்பிள் என்றும் அழைக்கப்படும் நுங்கு, பனை மரத்தின் (போராசஸ் ஃபிளாபெல்லிஃபர்) பழமாகும். இது ஜெல்லி போன்று, சற்று இனிப்பாக இருக்கும், தேங்காயின் சுவையைக் கொண்டிருக்கும். தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தென்னிந்தியாவின் பிற பகுதிகளில், குறிப்பாக கோடை காலத்தில், நுங்கு அல்லது ஐஸ் ஆப்பிள் அதிகமாக உட்கொள்ளப்படுகிறது.
நுங்கு பால் ஊட்டச்சத்து (தோராயமாக 1 டம்ளரில்)
கலோரிகள்: 120–150 கிலோகலோரி
கார்போஹைட்ரேட்டுகள்: 20–25 கிராம்
இயற்கை இனிப்புகள்: 15–18 கிராம்
புரதம்: 3–5 கிராம்
கொழுப்பு: 2–4 கிராம்
நார்ச்சத்து: 1–2 கிராம்
அதிகளவு வைட்டமின்கள் ஏ, பி-காம்ப்ளக்ஸைக் கொண்டுள்ளது
பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன
குறிப்பு: பால் வகை மற்றும் இனிப்பு (ஏதேனும் இருந்தால்) சேர்க்கப்பட்டதைப் பொறுத்து ஊட்டச்சத்து மதிப்பு மாறுபடும்.
நுங்கு பாலின் ஆரோக்கிய நன்மைகள்
நீரேற்றத்துடன் இருக்க செய்கிறது
நுங்கில் கிட்டத்தட்ட 90% தண்ணீர் நிறைந்துள்ளது. இதில் பால் கலக்கப்படும்போது, அதிக நீரேற்றத்தை வழங்குகிறது மற்றும் இழந்த எலக்ட்ரோலைட்டுகளையும் திரவங்களையும் நிரப்புகிறது, இது கோடைகாலத்தில் அனைவருக்கும் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.
இயற்கையான குளிர்விப்பான்
நுங்கின் இயற்கையான குளிர்ச்சி செரிமான கோளாறுகளைத் தடுக்கவும், உடல் வெப்பத்தைக் குறைக்கவும், வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்கவும் உதவுகின்றன. நுங்கு பாலை தொடர்ந்து உட்கொள்வது வெப்பம் தொடர்பான உடல்நல சிக்கல்களைத் தவிர்க்க உதவுகிறது.
செரிமானத்தை ஊக்குவிக்கிறது
நுங்கு இலேசானது, நார்ச்சத்து நிறைந்தது, இது குடல் இயக்கங்களை சீராக்கவும் மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது. இந்தப் பானம் கோடையில் பொதுவாக ஏற்படும் வீக்கம், குமட்டல் மற்றும் அஜீரணம் போன்ற பொதுவான செரிமான பிரச்சினைகளிலிருந்து உடனடி நிவாரணத்தையும் வழங்குகிறது.
ஆற்றலை அதிகரிக்கிறது
நுங்கில் இயற்கையான சர்க்கரைகள் இருப்பதால் வழக்கமான செயல்பாடுகளைச் செய்வதற்கான ஆற்றலை வழங்குகிறது. மேலும் பாலில் உள்ள புரத உள்ளடக்கம் உங்களை திருப்திப்படுத்துகிறது மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்தது
நுங்கு பாலில் பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற தாதுக்கள் அதிகமாக உள்ளது, இது எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்கவும், தசைகளை தளர்த்தவும், தசை செயல்பாட்டை பராமரிக்கவும் உதவுகிறது.
தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
நுங்கு பாலில் 90% தண்ணீர் உள்ளது, மேலும் அதன் குளிர்ச்சியான தன்மை வெப்ப சினைப்புகள், வேர்க்குரு மற்றும் பிற பொதுவான தோல் தொடர்பான பிரச்சினைகளைத் தணிக்க உதவுகிறது.
நுங்கு பால் ஏன் சரியான கோடைகால பானம்?
மற்ற சர்க்கரை நிறைந்த பானங்கள் அல்லது காஃபின் கலந்த பானங்களைப் போலல்லாமல், நுங்கு பால்:
- இயற்கையான நீரேற்றி
- தூய்மையானது மற்றும் பதப்படுத்திகள் இல்லாதது
- முக்கிய எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்தது
- லேசானது மற்றும் எளிதில் செரிமானமாகக்கூடியது
- புத்துணர்ச்சியூட்டும் மற்றும் உற்சாகமளிக்கும்
இந்தப் பானம் உடற்பயிற்சிக்குப் பிறகு, மதிய வேளையில் வெப்பத்தின் போது அல்லது காலையில் குடிப்பதற்கு ஏற்றது.
வீட்டில் நுங்கு பால் எப்படி தயாரிப்பது?
தேவையான பொருட்கள்
4 தோல் நீக்கிய நுங்கு அல்லது ஐஸ் ஆப்பிள்
1 கிளாஸ் குளிர்ந்த பால்
1–2 தேக்கரண்டி வெல்லம் தூள் அல்லது தேன் (விரும்பினால்)
ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள் (விரும்பினால்)
ரோஸ் எசன்ஸ் அல்லது ஊறவைத்த குங்குமப்பூவின் சில இழைகள் (விரும்பினால்)
செய்முறை
நுங்குவை உரித்து சிறிய துண்டுகளாக நறுக்கவும்
ஒரு கிண்ணத்தில் அல்லது கிளாஸில் குளிர்ந்த பாலை சேர்க்கவும்.
நறுக்கிய நுங்கு துண்டுகளுடன் நன்றாக கலக்கவும்.
தேவைப்பட்டால் வெல்ல தூள் அல்லது தேன், ஏலக்காய் மற்றும் ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும்.
நன்றாகக் கிளறி உடனடியாக குளிர்ச்சியாகப் பரிமாறவும்.
விரும்பினால்: சுவைகள் நன்றாகக் கலக்க 10–15 நிமிடங்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
முடிவுரை:
நுங்கு பால் ஒரு பாரம்பரிய புத்துணர்ச்சியூட்டும் கோடைகால பானம் மட்டுமல்ல, இது ஓர் இயற்கை குளிரூட்டி, ஆற்றல் ஊக்கி மற்றும் நீரேற்றம் தரும் பானமாக மதிப்பிடப்படுகிறது. இந்தக் கோடையில் புத்துணர்ச்சியுடன் இருக்க ஒரு சுவையான, ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த வழியை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இந்த எளிய ஆனால் சக்திவாய்ந்த பானத்தைப் பருகுங்கள்.
பொறுப்புத் துறப்பு:
உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.