கோடையின் கடுமையான வெப்பம் தீவிரமடையும் போது, ​​ஒரு கிளாஸ் குளிர்ந்த நீரைப் போல புத்துணர்ச்சியூட்டுவது எதுவுமில்லை. ஆம், குளிர்ந்த நீர் குடிப்பது உடலை புத்துணர்ச்சியடையச் செய்கிறது; தாகத்தைத் தணிக்கிறது. அதோடு, கொளுத்தும் வெப்பத்திலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. குளிர்ந்த நீரின் தாக்கத்தை அறிந்துகொள்வது, வெப்பமான மாதங்களில் தங்களை நீரேற்றமாக வைத்திருப்பது குறித்து மக்கள் சரியான முடிவுகளை எடுக்க உதவும்.
drinking cold water

கோடையில் குளிர்ந்த நீர் குடிப்பது ஆரோக்கியமானதா? அல்லது அதற்கு ஏதேனும் பக்கவிளைவுகள் உள்ளனவா? இந்தச் கோடை காலத்தில் குளிர்ந்த நீர் குடிப்பதன் பின்னணியில் உள்ள கட்டுக்கதைகள் மற்றும் அறிவியலை உடைக்க இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

கோடையில் குளிர்ந்த நீரைக் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

உடனடி நீரேற்றம்

குளிர்ந்த நீர் வழக்கமான தண்ணீரை விட அதிக விகிதத்தில் உடலின் வெப்பநிலையைக் குளிர்விக்கும். திறந்தவெளி உடற்பயிற்சிகள் அல்லது வெப்பமான இடங்களில் வழக்கமான செயல்பாடுகளை மேற்கொண்ட பிறகு, குளிர்ந்த நீர் குடிப்பது உடல் வெப்பநிலையை திறம்பட குறைக்கும்.

விழிப்புடன் இருக்க செய்கிறது

குளிர்ந்த நீர் ஒரு இயற்கையான தூண்டுதலாக செயல்படுகிறது, விழிப்புடன் இருக்க தூண்டுகிறது மற்றும் உங்களுக்கு விரைவாக ஊட்டமளிக்கிறது. இது வெப்பமான காலநிலையில் உங்களை உற்சாகமாக வைத்திருக்கவும் சோர்வைக் குறைக்கவும் உதவும்.

அதிகமாக குடிக்க உங்களைத் தூண்டுகிறது

பலர் வழக்கமான தண்ணீரை விட குளிர்ந்த நீரைக் குடிப்பதை விரும்புகிறார்கள், இது அடிக்கடி தண்ணீர் குடிக்க ஊக்குவிக்கிறது மற்றும் நீரிழப்பைத் தடுக்கிறது.

சாத்தியமான பக்கவிளைவுகள் மற்றும் பிரச்சினைகள்

குளிர்ந்த நீர் நன்மையைத் தரும் என்றாலும், அது எல்லா சூழ்நிலைகளிலும் அனைவருக்கும் பொருந்தாது.

செரிமான பிரச்சினைகள்

சாப்பிட்ட பிறகு அல்லது சாப்பிடும்போது மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பது, குடலில் உள்ள இரத்த நாளங்களைச் சுருக்கி, செரிமான செயல்முறையைத் தடுக்கலாம். இது சிலருக்கு வீக்கம், வயிற்றுப் பிடிப்புகள் அல்லது பிற செரிமான அசௌகரியங்களை ஏற்படுத்தும்.

தொண்டை எரிச்சல்

தொண்டை புண் அல்லது சுவாச நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகும் நபர்களுக்கு, குளிர்ந்த நீர் குடிப்பது தொண்டைப் புறணியை எரிச்சலடையச் செய்யலாம், குறிப்பாக மிக வேகமாக அல்லது தொடர்ந்து எடுத்துக் கொண்டால் இவ்வாறு ஏற்படலாம்.

தலைவலி

குளிர்ந்த நீரை விரைவாகக் குடிப்பது "மூளை உறைதல்" எனப்படும் கடுமையான தலைவலியை ஏற்படுத்தும், இது திடீர் வெப்பநிலை மாற்றங்களை ஏற்படுத்தி வாய் மற்றும் தலையில் உள்ள நரம்புகளைப் பாதிக்கிறது.

தற்போதுள்ள நோய்களை மோசமாக்குகிறது

ஒற்றைத் தலைவலி, சைனசைட்டிஸ் அல்லது பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்புகளால் பாதிக்கப்பட்ட நபர்கள் குளிர்ந்த நீரைக் குடிப்பது அவர்களின் அறிகுறிகளை மோசமாக்கும்.

ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

ஆயுர்வேதத்தின்படி, குளிர்ந்த நீர் உடலின் இயற்கையான சமநிலையான "அக்னி" அல்லது செரிமான நெருப்பைத் தடுக்கும். ஆயுர்வேதக் கொள்கைகள், செரிமானத்தை ஊக்குவிக்கவும் உடல் செயல்பாடுகளை சமநிலைப்படுத்தவும் வெதுவெதுப்பான அல்லது அறை வெப்பநிலை நீரைக் குடிக்க பரிந்துரைக்கின்றன. குறிப்பாக, உணவு வேளையில் இதனைப் பின்பற்றுவது நல்லது.

எது சிறந்த நடைமுறை?

இந்த வெப்பமான பருவத்தில் நீரேற்றத்துடனும் ஊட்டச்சத்துடன் இருக்க ஏராளமான ஆரோக்கியமான மாற்றங்கள் உள்ளன. அறை வெப்பநிலையில் உள்ள அல்லது சற்று குளிர்ந்த நீரைக் குடிக்கவே பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் இது உடலில் மென்மையாகச் செயல்பட்டு மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் உடலை நன்கு நீரேற்றமாக வைத்திருக்கிறது. தாகத்தைத் தணிக்க ஒரு சிறந்த வழி, நீர்ச்சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வதை அதிகரிப்பதாகும். தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் ஆரஞ்சு போன்ற ஏராளமான வண்ணமயமான பழங்களில் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இவை ஊட்டமளிப்பது மட்டுமல்லாமல், அதிகளவு முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் வழங்குகின்றன. இந்தப் பழங்கள் நீரேற்ற அளவைப் பராமரிக்கவும் இழந்த திரவத்தை நிரப்பவும் உதவுகின்றன.

ஒவ்வொரு நபரின் நீரேற்றத் தேவைகளும் தனித்துவமானவை. இவை வயது, உடல்நிலை மற்றும் உடல் செயல்பாடு போன்ற பல காரணிகளால் தாக்கத்திற்கு உள்ளாகின்றன. எனவே, தனிப்பட்ட ஆறுதல் மற்றும் உடல்நல தேவைகளுக்கு ஏற்ப நீரேற்ற நடைமுறைகளை அமைத்துக்கொள்வது முக்கியம். சிலருக்கு, சற்று குளிர்ந்த நீர் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கலாம், சிலருக்கு அறை வெப்பநிலையில் வைத்திருக்கும் திரவங்கள் பயனளிக்கும்.

நினைவில் கொள்ள வேண்டியவை

  • உணவு உண்ணும்போது குளிர்ந்த நீரைத் தவிர்க்கவும்; அதற்கு பதிலாக, சாதாரண நீரைத் தேர்ந்தெடுக்கவும்
  • குளிர்ந்த நீரை ஒருபோதும் விரைவாக விழுங்க வேண்டாம்; உங்கள் உடலில் திடீர் அதிர்ச்சி ஏற்படுவதைத் தவிர்க்க மெதுவாகப் பருகவும்
  • எப்போதும் உங்கள் உடல் சொல்வதைக் கேளுங்கள். குளிர்ந்த நீர் அசௌகரியத்தை ஏற்படுத்தினால், அறை வெப்பநிலையில் உள்ள அல்லது சற்று குளிர்ச்சியாக இருக்கும் நீரைப் பருகவும்.

முடிவு

கோடை காலத்தில் குளிர்ந்த நீரைக் குடிப்பது பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பானது மற்றும் கடுமையான வெப்பத்திலிருந்து விரைவாக நிவாரணம் அளிக்கிறது. இருப்பினும், மிதமாகப் பருகுவதும், சரியான நேரத்தில் பருகுவதும் முக்கியம். உங்கள் உடலின் எதிர்வினையை எப்போதும் கவனத்தில் கொள்வது, பருவம் முழுவதும் ஆரோக்கியமாகவும், நீரேற்றமாகவும், உற்சாகமாகவும் இருக்க உதவும்.

பொறுப்புத் துறப்பு:

உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.