மலச்சிக்கலால் அவதிப்படுகிறீர்களா? கவலை வேண்டாம். இது நீங்கள் மட்டும் சந்திக்கும் பிரச்சினை இல்லை. சுமார் 20% மக்கள் மலச்சிக்கலை அனுபவிக்கின்றனர். நீங்கள் உண்ணும் உணவு வாயில் இருந்து செரிமான பாதை வழியாகச் சென்று, உடலிலிருந்து வெளியேறுகிறது. வழக்கமாக, உணவு குடல் வழியாக செல்ல 6 முதல் 8 மணி நேரம் ஆகும். மலச்சிக்கல் இந்த செயல்முறையைத் தடுக்கலாம், மேலும் செரிமானத்தைத் தாமதப்படுத்தலாம், இது வயிறு சார்ந்த பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். மலம் கழித்தல் முக்கியமாக வயது, உடல் செயல்பாடு மற்றும் உணவுப் பழக்கத்தைப் பொறுத்தது. பெரும்பாலும் பலர் வேலை பரபரப்பில் நிறைய தண்ணீர் குடிக்கவும், உடற்பயிற்சி செய்யவும் மற்றும் பணியிடத்தில் மன அழுத்தத்தைக் குறைக்கவும் நேரம் ஒதுக்குவது கடினமாக இருக்கிறது. மேலும், மலச்சிக்கல் உள்ளவர்களில் சுமார் 33% பேர் பதட்டத்தையும் 31% பேர் மனச்சோர்வையும் எதிர்கொள்வதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எவ்வளவு நீர் அருந்துகிறீர்கள் என்பதைக் கண்காணித்தல், மிதமான உடற்பயிற்சியை மேற்கொள்ளுதல் மற்றும் ஓய்வெடுக்கவும் அமைதியாக இருக்கவும் நேரம் செலவிடுதல் போன்ற எளிய நடவடிக்கைகள் உங்களுக்குப் பயனளிக்கும். கவலைப்பட வேண்டாம், நீங்கள் உடனடியாக மலம் கழிக்க உதவும் உணவுகளை அறிந்துகொள்வது செரிமான பிரச்சனைகளை உடனடியாக நீக்குவதற்கு பெரிதும் துணைபுரியும்.
உகந்த செரிமானத்தை ஊக்குவிக்கும் சில பானங்களை இங்கே நாங்கள் கொடுத்துள்ளோம், ஆனால் அவை ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் உதவும். இந்த இயற்கை தீர்வுகள் ஒருவரை இலகுவாகவும் மகிழ்ச்சியாகவும் உணர வைக்கின்றன.
மலச்சிக்கலைப் போக்கும் 7 இயற்கை பானங்கள்
விளக்கெண்ணெய்
வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் மலச்சிக்கலைக் கையாள உங்களுக்கு உதவும் இந்தப் பழங்கால தீர்வு ஒரு இயற்கை அதிசயமாக மதிப்பிடப்படுகிறது. விளக்கெண்ணெய் ஒரு மலமிளக்கியாக செயல்படுகிறது, இது குடலில் உள்ள தசைகளை நகர்த்தி, மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. ஆனால், இதன் சுவை நமக்குப் பிடிக்காது. எனவே, விளக்கெண்ணெயை குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்திருந்து, பின்னர் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறை கலக்கவும்.
செரிமான செயல்முறையை மேம்படுத்தவும், மலச்சிக்கலைப் போக்கவும் வெறும் வயிற்றில் சுமார் 1 மேசைக்கரண்டி ஆமணக்கு எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஆப்பிள் ஜூஸ்
ஆப்பிள் ஜூஸில் உள்ள நார்ச்சத்து மற்றும் சர்பிடால் ஆகியவை சரியாக மலம் கழிக்க உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை எதிர்த்துப் போராடுகிறது. ஆப்பிள் சாற்றில் உள்ள பெக்டின் என்ற நார்ச்சத்து செரிமான செயல்முறையைத் தூண்டுவதற்கும் மலம் கழித்தலை மேம்படுத்துவதற்கும் உதவும். மேலும், ஆப்பிள் ஜூஸில் வைட்டமின்கள் சி, ஏ மற்றும் கால்சியம் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன, இவை ஆரோக்கியத்தை ஊக்குவித்து, ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துகிறது.
காபி
நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் புத்துணர்வுடனும் இருக்க நம்மில் பெரும்பாலோர் ஒரு கப் காபியுடன் நாளைத் தொடங்குகிறோம். காபியில் குளோரோஜெனிக் அமிலம் உள்ளது, இது செரிமான மண்டலத்தில் அமிலத்தின் சுரப்பைத் தூண்டுகிறது. இது பெரிஸ்டால்சிஸ் இயக்கங்களைத் தொடங்கி, இது மலம் கழிக்கும் நேரம் என்று மூளைக்கு சமிக்ஞையை அனுப்புகிறது. ஒரு கப் காபி குடித்த 20 நிமிடங்களுக்குள் 29% பேருக்கு மலம் கழிக்க வேண்டும் என்ற தூண்டுதல் ஏற்படுவதாக ஆராய்ச்சி கூட கண்டறிந்துள்ளது. நீரிழப்பு காரணமாக இது மலச்சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் அதை அதிகமாக அருந்த வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எலுமிச்சை சாறு
வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த எலுமிச்சை சாறு மலத்தை இளக்க உதவுகிறது, மலம் கழிப்பதை எளிதாக்குகிறது. இந்த சாறு ஒரு டீடாக்ஸ் பானமாக செயல்படுகிறது, இது உடலைச் சுத்தப்படுத்துகிறது மற்றும் மலம் வெளியேற்ற செயல்முறையை துரிதப்படுத்துகிறது.
மலச்சிக்கலைக் குறைக்க காலையில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும்.
ப்ரூன் ஜூஸ்
உங்களை உடனடியாக மலம் கழிக்க வைக்கும் சக்தி ப்ரூன் பழத்திற்கு உள்ளது. கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து நிறைந்த ப்ரூன் ஜூஸ் இரண்டும் இதில் நிறைந்துள்ளதால் மலம் கழிப்பதை எளிதாக்குகிறது. இது தவிர, ப்ரூன் ஜூஸில் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் சர்பிடால் ஆகியவை உள்ளன, இவை அனைத்தும் இயற்கையான மலமிளக்கி குணங்களைக் கொண்டிருப்பதாகவும் குடல் செயல்பாடுகளை மேம்படுத்துவதாகவும் அறியப்படுகிறது. மேலும், 100 கிராம் ப்ரூன், சைலியம் போன்ற பிரபலமான மலமிளக்கியைப் போல் வேலை செய்வதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
கற்றாழை சாறு
கற்றாழை சாறில் இயற்கையான மலமிளக்கியாக செயல்படும் பயோஆக்டிவ் கலவைகள் நிறைந்துள்ளது. கற்றாழை சாறு நீரேற்றத்தை மீட்டெடுக்க உதவுகிறது. ஒரு கிளாஸ் கற்றாழை சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து வெறும் வயிற்றில் குடிப்பது எளிதாக மலம் கழிக்கவும், மலச்சிக்கலை போக்கவும், IBS அறிகுறிகளை மேம்படுத்தவும் உதவும்.
மூலிகை தேநீர்
புதினா தேநீர் செரிமான செயல்பாடுகளை ஆதரிக்கும் ஆண்டிஸ்பாஸ்மோடிக் மற்றும் கார்மினேடிவ் பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மெத்தனாலின் இருப்பு வயிற்றுப் பிடிப்பைத் தடுக்கிறது, தசைகளை இளைப்பாற செய்து, மலம் கழிக்கும் செயல்முறையை எளிதாக்குகிறது.
இஞ்சி தேநீர் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது மற்றும் செரிமானத்தையும் மலம் வெளியேறுவதையும் துரிதப்படுத்துகிறது.
பொறுப்புத் துறப்பு:
உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.