பிளேட்லெட்டுகள் எனப்படும் தட்டணுக்கள் இரத்தத்தை உருவாக்கும் மிகச்சிறிய செல் துண்டுகள், மேலும் இது த்ரோம்போசைட்டுகள் என்றும் அழைக்கப்படுகிறது. இது இரத்த உறைதலில் முக்கிய பங்கு வகிக்கிறது, இது காயத்திலிருந்து இரத்தம் வடிவதை நிறுத்த உதவுகிறது. பிளேட்லெட்டுகள் எலும்பு மஜ்ஜையில் உற்பத்தி செய்யப்பட்டு இரத்த ஓட்டத்தில் சுழல்கின்றன. இரத்த நாளம் சேதமடைந்தால், பிளேட்லெட்டுகள் அந்த இடத்திற்கு விரைந்து சென்று, இரத்தப்போக்கை நிறுத்த ஒரு வழியை உருவாக்குகின்றன.
foods to increase platelets

வழக்கமாக பிளேட்லெட் எண்ணிக்கை ஒரு மில்லி இரத்தத்திற்கு 150,00 முதல் 450,00 வரை இருக்கும். த்ரோம்போசைட்டோபீனியா என்பது பிளேட்லெட் அளவுகள் மிகக் குறைவாக இருக்கும்போது ஏற்படும் ஒரு நிலை. மேலும் இது ஏராளமான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

த்ரோம்போசைட்டோபீனியாவுடன் காய்ச்சல் உருவானால் அது தொற்றுநோய்க்கான பொதுவான அறிகுறியாகும். பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான இயற்கை வைத்தியம் பற்றி மேலும் அறிய இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

பிளேட்லெட் அளவுகள் குறைவாக இருக்கும்போது என்ன நடக்கும்?

அதிகப்படியான சிராய்ப்பு, வெட்டுக்களிலிருந்து நீடித்த இரத்தப்போக்கு, மூக்கில் இரத்தம் வடிதல். ஈறுகளில் இரத்தக்கசிவு, மாதவிடாய்போது அதிக இரத்தப்போக்கு மற்றும் தீவிர சோர்வு ஆகியவை குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கையின் பொதுவான அறிகுறிகளாகும். மிகவும் கடுமையான சந்தர்ப்பங்களில், இது உடலுக்குள் இரத்தம் கசிவதற்கு வழிவகுக்கும், இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். த்ரோம்போசைட்டோபீனியாவுக்கு பல காரணங்கள் உள்ளன:

  • வைரஸ் தொற்றுகள் (எ.கா., டெங்கு, ஹெபடைடிஸ் அல்லது ஹெச்.ஐ.வி)
  • சில மருந்துகள் அல்லது கீமோதெரபி
  • ஆட்டோஇம்யூன் நோய்கள்
  • எலும்பு மஜ்ஜை கோளாறுகள்
  • ஊட்டச்சத்து குறைபாடுகள் (எ.கா., வைட்டமின் பி12, ஃபோலேட் அல்லது இரும்புச்சத்து)

குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கைக்கான சிகிச்சை பொதுவாக அறிகுறிகளின் வகை மற்றும் தீவிரத்தைப் பொறுத்தது. லேசான த்ரோம்போசைட்டோபீனியாவை சமச்சீரான உணவு மற்றும் சப்ளிமெண்ட்கள் மூலம் கட்டுப்படுத்தலாம்.

இருப்பினும், மிதமானது முதல் கடுமையானது வரை குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை உள்ளவர்களுக்கு எந்த சிக்கல்களையும் தவிர்க்க உடனடி மருத்துவ கவனிப்பு தேவை.

பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க இயற்கை வழிகள்

வைட்டமின் பி12

வைட்டமின் பி12  என்பது இரத்த அணுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஒரு முக்கிய ஊட்டச்சத்து ஆகும். இந்த வைட்டமின் குறைபாடு குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கையுடன் தொடர்புடையது; இருப்பினும், இது மிகவும் அரிதானது. வைட்டமின் பி12 நிறைந்த சில உணவுகளில் பின்வருவன அடங்கும்:

  • சிவப்பு இறைச்சி, மட்டி
  • முட்டை
  • சூரை மற்றும் சால்மன் போன்ற மீன்

வீகன் அல்லது சைவ உணவைப் பின்பற்றுபவர்கள் வைட்டமின் பி12-ஐ வலுவூட்டப்பட்ட தானியங்கள் அல்லது சப்ளிமெண்ட்கள் மூலம் பெறலாம்.

ஃபோலேட்

ஃபோலேட் என்பது இரத்த அணுக்கள் மற்றும் உடலில் உள்ள பிற முக்கிய உறுப்புகளை ஆதரிக்கும் ஒரு வைட்டமின் பி 9 ஆகும். ஃபோலேட் குறைபாடு குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கைக்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன, இருப்பினும், இது ஒற்றை காரணி மட்டுமல்ல.

ஃபோலேட் நிறைந்த உணவு ஆதாரங்களில் பின்வருவன அடங்கும்:

  • வேர்க்கடலை
  • பருப்பு வகைகள் மற்றும் சிவப்பு காராமணி (ராஜ்மா)
  • ஆரஞ்சு

இரும்புச்சத்து

இரும்புச்சத்து என்பது ஆரோக்கியமான இரத்த அணுக்களை உருவாக்க உடலுக்கு இன்றியமையாத ஒரு முக்கிய கனிமமாகும். இரும்புச்சத்து குறைபாடு த்ரோம்போசைட்டோபீனியாவுக்கு வழிவகுக்கும், ஆனால் இரும்புச்சத்து உட்கொள்ளலை அதிகரிப்பது பிளேட்லெட் எண்ணிக்கையை மேம்படுத்த உதவும்.

இரும்புச்சத்து நிறைந்த சில உணவு ஆதாரங்களில் பின்வருவன அடங்கும்:

  • கீரைகள்
  • சிவப்பு இறைச்சி
  • சுண்டைக்காய்
  • பருப்பு வகைகள் மற்றும் பயறு வகைகள்
  • பூசணி விதைகள்

வைட்டமின் சி

வைட்டமின் சி பிளேட்லெட்டுகளை குழுவாக்குவதிலும் இரத்த அணுக்களின் ஆரோக்கியமான செயல்பாட்டிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஊட்டச்சத்து இரும்புச்சத்தைத் திறம்பட உறிஞ்ச உதவுகிறது, இது பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும் பங்களிக்கிறது.

வைட்டமின் சி நிறைந்த உணவு ஆதாரங்களில் பின்வருவன அடங்கும்:

  • நெல்லிக்காய்
  • கொய்யா
  • சிட்ரஸ் பழங்கள்
  • அன்னாசி
  • ப்ரோக்கோலி
  • குடை மிளகாய்
  • தக்காளி
  • காலிஃபிளவர்

பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கும் சப்ளிமெண்ட்கள்

பப்பாளி இலை சாறு

இம்யூன் த்ரோம்போசைட்டோபெனிக் பர்புராவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளேட்லெட் எண்ணிக்கையை மேம்படுத்த பப்பாளி இலை சாறு பெரிதும் உதவியுள்ளது என்று ஓர் ஆய்வு கண்டறிந்துள்ளது. பப்பாளி இலை சாறு குடிப்பது அல்லது பப்பாளி பழத்தை உட்கொள்வது டெங்குவால் தூண்டப்பட்ட த்ரோம்போசைட்டோபீனியா உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும்.

சீம்பால்

சீம்பால் என்பது கன்று தனது தாய் பசுவிடமிருந்து பெறும் முதல் பால் ஆகும். இது இப்போது ஒரு பொதுவான உணவு நிரப்பியாக உருவாக்கப்பட்டுள்ளது. கொலஸ்ட்ரமின் சேர்மங்களில் பிளேட்லெட்டை செயல்படுத்துவதிலும், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதிலும் உதவும் புரதங்கள் இருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது.

மது/ பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும்

மது, பிளேட்லெட் உற்பத்தியை அடக்கி எலும்பு மஜ்ஜையை சேதப்படுத்தும். இதேபோல், அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு உள்ளடக்கம் கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள் பிளேட்லெட் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

அதிக திரவங்கள்

நீரிழப்பு இரத்த அளவைக் குறைத்து பிளேட்லெட் எண்ணிக்கையை பாதிக்கும். எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்கவும் பிளேட்லெட் அளவை மேம்படுத்தவும் நாள் முழுவதும் அதிக திரவங்களை குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மூலிகை வைத்தியம்

கோதுமை புல் மற்றும் சீந்தில் (டினோஸ்போரா கார்டிஃபோலியா) போன்ற மூலிகைகள் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிப்பதாகப் பாரம்பரியமாக நம்பப்படுகிறது. கோதுமை புல் சாற்றில் குளோரோபில் நிறைந்துள்ளது, இது இரத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.

எப்போது மருத்துவ உதவியை நாட வேண்டும்?

இயற்கை வைத்தியங்கள் பிளேட்லெட் அளவை மேம்படுத்த உதவும்; இருப்பினும், அறிகுறிகள் தொடர்ந்தால் அல்லது மோசமடைந்தால் தொடர்ந்து கண்காணித்து மருத்துவரை அணுகுவது அவசியம். கடுமையான சந்தர்ப்பங்களில், பிளேட்லெட் பரிமாற்றங்கள் அல்லது மருந்துகள் போன்ற மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படலாம்.

பொறுப்புத் துறப்பு:

உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.