உலகெங்கிலும் இலட்சக்கணக்கான மக்கள் சயாட்டிகாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பலருக்கு சயாட்டிகா குறித்த புரிதல் இல்லை. சயாட்டிகா நரம்பு பாதையைப் பின்பற்றும் இந்தத் தொடர்ச்சியான வலி, கீழ் முதுகில் தொடங்கி, புட்டத்தின் வழியாக வலியை ஏற்படுத்தி கால்கள் வரை செல்லும். சயாட்டிக் நரம்பு அழுத்தப்படுவதால் அல்லது எரிச்சல் ஏற்படுவதால் இந்த அசௌகரியம் ஏற்படுகிறது, இது ஒருவரின் வாழ்க்கைத் தரத்தைக் கணிசமாக பாதிக்கக்கூடிய அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது.
வலியையும் அசெளகரியத்தையும் ஏற்படுத்தும் சயாட்டிகா, தினசரி வாழ்க்கையைக் கணிசமாக பாதிக்கலாம். குறிப்பாக சயாட்டிகா வலி இரவில் தீவிரமடைவதால் தூக்கம் தடைபடுகிறது. இருப்பினும், சரியான புரிதலாலும், சரியாக நிர்வகிப்பதாலும் சயாட்டிகாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் நிவாரணம் பெறலாம் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தலாம். மருத்துவருடன் கலந்தாலோசிப்பது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பது மற்றும் சயாட்டிகாவிற்கான வைத்தியங்களை மேற்கொள்வது ஆகியவை இரவு நேர சயாட்டிக் வலியை திறம்பட நிர்வகிக்க மிகவும் உதவுகின்றன.
சயாட்டிகாவின் அறிகுறிகள்:
சயாட்டிகாவால் அவதிப்படுபவர்களுக்குப் பல்வேறு அறிகுறிகள் ஏற்படலாம், அவை:
- கூர்மையான வலி: பல நோயாளிகள் அடிக்கடி அதை கீழ் முதுகிலிருந்து கால்கள் வரை பாயும் குத்தும் வலி அல்லது எரியும் உணர்வு என்று விவரிக்கிறார்கள்.
- உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு: பாதிக்கப்பட்ட கால் அல்லது பாதத்தில் குத்தும் வலி அல்லது உணர்வின்மை.
- தசை பலவீனம்: பாதிக்கப்பட்ட காலை நகர்த்துவதில், நிற்பதில் அல்லது நடப்பதில் சிரமம்.
- இரவில் மோசமடையும் அறிகுறிகள்: இரவு நேரத்தில் வலி அதிகமாகி, தூக்கத்தை சீர்குலைக்கக்கூடிய குறிப்பிடத்தக்க அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
சயாட்டிகா வலி இரவில் ஏன் தீவிரமடைகிறது?
இரவில் சயாட்டிக் வலி ஏன் அதிகமாக இருக்கிறது என்பதை புரிந்துகொள்வதால் அதனை திறமிக்க முறையில் நிர்வகிக்கலாம். இரவில் இந்த வலி அதிகமாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன:
செயலற்ற தன்மை: பகல் முழுவதும் இயங்குதல் மற்றும் செயல்படுதல் காரணமாக சயாட்டிக் நரம்பில் சிறிது அழுத்தம் குறையலாம். இருப்பினும், நீண்டநேரம் படுத்துக் கொள்ளும்போது, இயக்கமின்மை காரணமாக இரவில் வலி அதிகரிக்கக்கூடும்.
திரவ மறுபகிர்வு: கிடைமட்டமாக படுத்திருக்கும் போது, பகலில் இன்டர்வெர்டெபிரல் டிஸ்க்குகளில் சேரும் திரவம் மறுபகிர்வு செய்யப்படுகிறது, இது நரம்பு வேர்கள் மீது அழுத்தத்தைச் செலுத்தி, தீவிர வலியை ஏற்படுத்துகிறது.
தூங்கும் தோரணை: தவறான தூக்க தோரணைகள் அல்லது கீழ் முதுகு மற்றும் கால்களைச் சரியாக வைக்காமல் இருப்பது சயாட்டிக் நரம்பை மேலும் அழுத்தி, அசௌகரியத்தை அதிகப்படுத்தும்.
இரவு நேர சயாட்டிகா வலியை நிர்வகிப்பதற்கான தீர்வுகள்:
சரியான தூக்க தோரணை: முதுகெலும்பின் இயற்கையான வளைவை பராமரிக்க உதவும் மெத்தை மற்றும் தலையணைகளைத் தேர்வு செய்து, கீழ் முதுகில் அழுத்தத்தைக் குறைத்திடுங்கள்.
தொடர்ந்து இயங்குதல்: நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும், சயாட்டிக் நரம்பு அழுத்தத்தைத் தணிக்கவும், உங்கள் தினசரி வழக்கத்தில் நீட்டிப்பு உடற்பயிற்சிகளைச் (stretching exercises) சேர்க்கவும்.
ஹீட் அல்லது ஐஸ் தெரபி: பாதிக்கப்பட்ட பகுதியில் குளிர்ந்த பொதிகளைப் பயன்படுத்துவது வீக்கத்தைக் குறைத்து, நரம்புகளை ஆற்றுப்படுத்தி தற்காலிக நிவாரணத்தை வழங்கும்.
வலி மேலாண்மை உத்திகள்: மருந்து கடைகளில் வாங்கும் வலி மருந்துகள் அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட தசை தளர்த்திகள் நிவாரணம் அளிக்கலாம். ஆனால், இவற்றைப் பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.
பிசியோ தெரபி: ஒரு நிபுணத்துவ இயன்முறை சிகிச்சையாளரின் ஆதரவுடன் பிரத்யேக பயிற்சிகள் மற்றும் சிகிச்சைகளைப் பெறுவது தசைகளை வலுப்படுத்தவும், தோரணையை மேம்படுத்தவும் மற்றும் சயாட்டிகா அறிகுறிகளைக் குறைக்கவும் உதவும்.
பொறுப்புத் துறப்பு:
உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.