குளிர் நடுக்கம் என்பது, சுற்றுப்புறம் அதிக குளிர் அல்லது உறைபனியாக இல்லாவிட்டாலும்கூட, உடல் முழுவதும் திடீரென ஏற்படும் நடுக்கத்தைக் குறிக்கிறது. இந்தக் குளிர் உணர்வுகள் பொதுவாக மலேரியா, நிமோனியா, டெங்கு, ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் போன்ற பல பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளிலிருந்து உருவாகும் காய்ச்சலின் காரணமாக ஏற்படுகின்றன. இருப்பினும், பிற உடல்நலக் குறைபாடுகளாலும், கீல்வாதம், மூளைக்காய்ச்சல், நீரிழிவு நோயில் இரத்த குளுக்கோஸின் அளவு திடீரென்று பெருமளவு குறைதல் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் போன்றவற்றாலும் குளிர் நடுக்கம் ஏற்படலாம்.
குளிர் நடுக்கத்திற்குப் பின்னால் உள்ள அடிப்படைக் காரணம், உடலில் உள்ள தசைகள் விரைவாக விரிவடைந்து சுருங்குவதும், அதே சமயம் தோலுக்குக் கீழே உள்ள இரத்த நாளங்கள் கடினமாகி இறுக்கமடைவதும் ஆகும். மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் போன்ற முக்கிய உள் உறுப்புகளுக்கு, கடுமையான சேதம் அல்லது தொற்றுநோய் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு, சூழலைச் மிதமான சூடாக வைத்திருக்க, உடலின் உள்ளமைக்கப்பட்ட இயக்கமுறையின் ஒரு பகுதியாக இந்தக் குளிர் நடுக்கம் ஏற்படுகிறது.
குளிர் நடுக்கம் என்பது ஒரு தனித்துவமான நோய் அல்ல, ஆனால் பல்வேறு நோய்களின் உணரக்கூடிய அறிகுறி என்பதால், உடல் நடுக்கத்திற்கு அதன் காரணத்தைப் பொறுத்து சிகிச்சையளிக்கப்படுகிறது. பருவகால நோய்த்தொற்றுகள் மற்றும் காய்ச்சலால் ஏற்படும் குளிர் காய்ச்சல்கள் போன்ற சிறிய நிகழ்வுகளில், போதுமான அளவு ஓய்வெடுப்பது, போதுமான தண்ணீரை உட்கொள்வது, உடலில் திடீரென ஏற்படும் குளிரை அடக்க உதவுகிறது. ஆயினும்கூட, நெஞ்சு வலி அல்லது மூச்சுத் திணறல் போன்ற தீவிரமான ஏதாவது ஒன்றை குளிர் நடுக்கம் ஏற்படுத்தினால், உடனடியாக, துல்லியமான நோயறிதல் மற்றும் சிகிச்சையை வழங்குவதற்கும் பாதிக்கப்பட்ட நபர் முழுமையாகக் குணமடைவதை உறுதி செய்வதற்கும் உடனடியாக மருத்துவருடன் கலந்தாலோசிப்பது அவசியம்.
குளிர் நடுக்கம் ஏற்படுவதற்கான காரணங்கள்
குளிர் நடுக்கத்துக்கு முதன்மையான காரணம் வெளிப்புற சூழல் குளிர்ச்சியாக இருப்பதாகும். குறிப்பாக குளிர்காலத்தில் குளிர் நடுக்கம் பரவலாக ஏற்படுகிறது. மலை ஏறுதல் போன்ற, நீண்ட காலம் குளிரில் இருக்கும் சவாலான சூழ்நிலைகளில் உடல் வெப்பநிலையில் திடீர் வீழ்ச்சி ஏற்படலாம்.
குளிர் நடுக்கத்துடன் உடல் வலிகளும் இருந்தால், நுண்ணுயிர் தொற்று ஏற்பட்டிருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதற்கான உதாரணங்களில் சளிக்காய்ச்சல், மலேரியா, டெங்கு, சிறுநீர் பாதை தொற்று (UTI) மற்றும் காசநோய் ஆகியவை அடங்கும்.
கணையம், நுரையீரல், இதயம் போன்ற பல்வேறு உறுப்புகளை பாதிக்கும் நாள்பட்ட கோளாறுகள், ஹார்மோன் சமநிலையின்மைகள் மற்றும் ஆஸ்துமா, சைனசைட்டிஸ், நீரிழிவு நோய், முடக்கு வாதம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவையும் சில நேரங்களில் அல்லது அடிக்கடி குளிர் காய்ச்சலை ஏற்படுத்துகின்றன.
இரத்த புற்றுநோய் போன்ற சில புற்றுநோய்களின் ஆரம்பநிலை மற்றும் அதற்குப் பிறகு தரப்படும் மருந்து, சிகிச்சை முறை ஆகியவை அடிக்கடி குளிர் காய்ச்சலை ஏற்படுத்தும். சில அடிப்படை நிலைமைகளுக்கான பிற பரிந்துரைக்கப்பட்ட அல்லது கடையில் கிடைக்கும் மருந்துகளும் குளிர் காய்ச்சலைத் தூண்டும்.
சில சமயம், உளவியல் நிகழ்வுகள் காரணமாகவும் குளிர் நடுக்கம் ஏற்படலாம். இவை மகிழ்ச்சி அல்லது ஏமாற்றம், பதட்டம், கவலை அல்லது நேரடியாகப் பார்த்த சாலை விபத்து, திரைப்படம் அல்லது இசை போன்றவற்றைப் பார்த்து ஏற்பட்ட பயம் ஆகியவற்றால் உருவாகலாம்.
மற்ற அறிகுறிகள்
சில சூழ்நிலைகளில், குளிர் நடுக்கமானது சில தீவிர உடல்நலக் கோளாறுகளால் ஏற்படலாம். இவை பெரும்பாலும் இதயம் மற்றும் மூளையின் முக்கிய உறுப்புகளை பாதிக்கின்றன.
குளிர் நடுக்கமானது உடலில் நீல நிறத்தை உருவாக்கலாம், இது இரத்த ஓட்டத்தில் அல்லது சயனோசிஸில் ஆக்ஸிஜனின் கடுமையான பற்றாக்குறையைக் குறிக்கிறது. இது இதய தசைகள் மற்றும் நரம்பு செல்களின் செயல்பாட்டை பெரிதும் பாதிக்கிறது மற்றும் உடலின் உள் உறுப்புகளுக்கு ஏற்படக்கூடிய கடுமையான சேதத்தைத் தவிர்க்க உடனடியாக சிகிச்சையளிக்கப்பட வேண்டும்.
நோய் கண்டறிதல்
நோயாளி தினசரி அல்லது நீண்ட காலத்திற்கு குளிர் நடுக்கம் ஏற்படுவதாகத் தெரிவித்தால், மருத்துவர் ஆரம்பத்தில் உடலின் முக்கிய அளவுருக்களான உடல் வெப்பநிலை, இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு மற்றும் சுவாச முறைகளை அளவிடுவார். நோய்த்தொற்று, சளி காய்ச்சல், தோல் சினப்புகள் பொன்ற அறிகுறிகள் உள்ளனவா மற்றும் செரிமானம், மூட்டு இயக்கம் மற்றும் தசை நெகிழ்வு போன்ற பிற செயல்பாடுகளில் ஏதேனும் இடையூறுகள் உள்ளனவா என்பதைக் கண்டறிய முழுமையான உடல் பரிசோதனையும் நடத்தப்படுகிறது.
ஏற்கனவே இருக்கும் உடல்நலப் பிரச்சினைகள் அல்லது நோயாளிக்கு ஏற்பட்ட நாட்பட்ட நோயாளிகள் போன்றவற்றின் காரணமாக குளிர் நடுக்கம் ஏற்படுகிறதா என்பதை மருத்துவர் தீர்மானிப்பார்.
ஏதேனும் நோய்த்தொற்று அல்லது அழற்சி நோய் இருப்பதுதான் குளிர் நடுக்கத்திற்கான காரணம் என்று சந்தேகிக்கப்படும் பட்சத்தில், மருத்துவர் இரத்தப் பரிசோதனைகள், சிறுநீர் பகுப்பாய்வு மற்றும் மார்பு எக்ஸ்-ரே ஆகிய உகந்த ஆய்வுகளை மேற்கொள்வார்.
சிகிச்சை
பருவகால நோய்கள் அல்லது பொதுவான பாக்டீரியா, வைரஸ் நோய்கள் குளிர் நடுக்கத்தைத் தூண்டும் போது, நோயைக் குணப்படுத்த பொருத்தமான மருந்துகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன, அதே நேரத்தில் சில எளிய வீட்டு வைத்தியம் மூலம் குளிர் நடுக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.
இதில் உடல் வலிகளைப் போக்க வலி நிவாரணி மருந்துகளை உட்கொள்வது, நிறைய தண்ணீர் குடிப்பது, நாள் முழுவதும் ஓய்வெடுப்பது ஆகியவை இதில் அடங்கும். மேலும், வெதுவெதுப்பான நீரில் நனைத்த துண்டுகளை நெற்றியில் வைக்கலாம், அதனுடன் கனமான போர்வைகளால் உடலை மூடலாம், குளிரடிக்காத ஆடைகளை அணியலாம். இவை உடல் வெப்பத்தைத் தூண்டும்.
இருப்பினும், கடுமையான சூழ்நிலைகளில், அதிக காய்ச்சல் நீண்ட நேரம் நீடிக்கும்போது, மூச்சு விடுவதில் சிரமம், பரவியிருக்கும் சினப்புகள், அசாதாரண இதயத் துடிப்பு, தீவிர பதட்டம், தசைகளில் பிடிப்புகள், மன குழப்பம் மற்றும் நெஞ்சில் அசௌகரியம் ஏற்படலாம். துல்லியமான நோயறிதலை எளிதாக்க மற்றும் நோயாளியை குணப்படுத்த விரைவான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
பொறுப்புத் துறப்பு:
உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.