தண்ணீர் நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் தண்ணீரின் முக்கியத்துவத்தை நம்மில் பலர் உணர்வதில்லை. தண்ணீர் இல்லையென்றால் ஒரே நாளில் வாடிவிடும் செடியைப் போலவே மனித உடலும் வாடிவிடும்.
Girl Drinking Water

தண்ணீர் தாகத்தைத் தணிப்பதோடு மட்டுமல்லாமல், உங்கள் உடலுக்கும், உறுப்புகளுக்கும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இவற்றில் பின்வருபவை அடங்கும்:

  • நீரிழப்பைத் தடுக்கிறது
  • உடல் வெப்பநிலையை சீர்ப்படுத்துகிறது
  • செல்களுக்கு ஊட்டச்சத்துக்களையும் ஆக்சிஜனையும் கொண்டு செல்கிறது
  • சருமத்திற்கும் பிற திசுக்களுக்கும் ஈரப்பதத்தை அளிக்கிறது
  • மலச்சிக்கலைப் போக்குகிறது
  • மூட்டு எலும்புகள் உராய்வதைத் தடுக்கிறது
  • தசையை வலுப்படுத்துகிறது
  • உடலில் நச்சுகளையும் கழிவுகளையும் நீக்குகிறது
  • வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் எடை இழப்பை ஊக்குவிக்கிறது

தண்ணீர் பற்றிய உண்மைகள்:

  • 75% க்கும் அதிகமான மக்கள் நாள்பட்ட நீரிழப்பால் அவதிப்படுகின்றனர்
  • தாகம் பெரும்பாலும் பசி என்று தவறாகக் கருதப்படுகிறது
  • லேசான நீரிழப்பு கூட ஒருவரின் வளர்சிதை மாற்றத்தை 3% குறைக்கும்
  • வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆரம்பக்கட்ட ஆய்வில், ஒரு கிளாஸ் தண்ணீர் 98% பேருக்குப் பசியைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது
  • சோர்வுக்கு முக்கிய காரணம் போதிய தண்ணீர் அருந்தாமல் இருப்பது
  • ஒரு நாளைக்கு 8-10 டம்ளர் தண்ணீர் குடிப்பது முதுகு மற்றும் மூட்டு வலிக்கு ஆறுதல் அளிக்கும் என்று ஓர் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது
  • தினமும் குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது பெருங்குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது

நம் உடலுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை?

ஒரு நாளைக்கு சராசரியாக 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

தண்ணீர் குடிக்க சரியான நேரம்:

  • எழுந்தவுடன் 2 கிளாஸ் தண்ணீர் குடிப்பது உள் உறுப்புகளை செயல்படுத்த உதவுகிறது
  • உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் 1 கிளாஸ் தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கு உதவும்
  • குளிப்பதற்கு முன் 1 கிளாஸ் தண்ணீர் குடிப்பது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்
  • படுக்கைக்குச் செல்லும் முன் 1 கிளாஸ் தண்ணீர் குடிப்பது பக்கவாதம் அல்லது மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும்

தண்ணீர் அருந்தும் பழக்கத்தை மேம்படுத்திக்கொள்ள, இவற்றை நினைவில் கொள்ளுங்கள்:

  • உங்கள் மூளையில் உள்ள நீரின் அளவு 80%
  • உங்கள் இரத்தத்தில் உள்ள நீரின் அளவு 90%
  • உணவை ஆற்றலாக மாற்ற உதவுகிறது
  • உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை எளிதாக்குகிறது
  • உங்கள் எலும்புகளில் 22% உருவாக்குகிறது
  • உங்கள் தசைகளில் உள்ள நீரின் அளவு 75%
  • உங்கள் முகம் மற்றும் தோல் உட்பட அனைத்து திசுக்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது

 அதிக தண்ணீர் குடிப்பதற்கான யோசனைகள்

  • தினமும் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்துங்கள்
  • அலுவலகத்தில் தண்ணீர் குடிக்க இடைவேளை எடுக்கவும்
  • வேலைக்கு அல்லது கல்லூரிக்குச் செல்லும்போது தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்லுங்கள்
  • நீங்கள் வேலை செய்யும் போது அருந்துவதற்கு ஒரு கப் தண்ணீரை உங்கள் மேஜையில் வைத்திருங்கள்
  • உடல் செயல்பாடுகளைச் செய்வதற்கு முன், செய்யும்போது மற்றும் செய்ததற்குப் பின் எப்போதும் தண்ணீர் அருந்தவும்

பொறுப்புத் துறப்பு:

உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.