தொண்டை புண் என்பது தொண்டையில் வலி, கரகரப்பு, வறண்ட அல்லது எரிச்சலூட்டும் உணர்வாகும். இது அடிக்கடி தொற்றுகள் அல்லது மாசுபட்ட காற்றால் தூண்டப்படுகிறது. தொண்டை புண் அசௌகரியத்தை ஏற்படுத்தினாலும், பொதுவாக அது தானாகவே சரியாகிவிடும்.
Sore Throat

தொண்டை புண்கள், தொண்டையின் எந்தப் பகுதி பாதிக்கப்படுகிறது என்கிற அடிப்படையில் பல்வேறு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

ஃபரிங்கைடிஸ் என்பது வாயின் பின்னால் உள்ள பகுதியில் ஏற்படும் அழற்சியாகும்.

டான்சிலைட்டிஸ் என்பது வாயின் பின்னால் உள்ள மென்மையான திசுவான டான்சில்ஸில் ஏற்படும் வீக்கம் மற்றும் சிவத்தல்.

லரிங்கைட்டிஸ் என்பது குரல்வளையில் ஏற்படக்கூடிய அழற்சி.

தொண்டை வலி ஏற்படுவதற்கான காரணம் என்ன?

90% க்கும் அதிகமான தொண்டை புண்களுக்குக் காரணம் வைரஸ்கள் ஆகும்.  அதே சமயம் மகரந்தம் மற்றும் செல்லப்பிராணி ஆபத்துகள் போன்ற ஒவ்வாமைகளால் தூண்டப்படும் ஸ்ட்ரெப்டோகாக்கால் நோய்த்தொற்றுகளை பாக்டீரியா ஏற்படுத்துகிறது. குளிர்காலத்தில் வறண்ட காற்று வாயில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, தொண்டை கரகரப்பை ஏற்படுத்தும் மற்றும் புகைபிடித்தல், இரசாயன வெளிப்பாடு மற்றும் காற்று மாசு போன்ற பிற சுற்றுச்சூழல் காரணிகளும் இந்த நிலைக்குப் பங்களிக்கின்றன.

அறிகுறிகள்

கரகரப்பு, எரிச்சல், வறட்சி போன்றவை தொண்டை புண் அறிகுறிகளாகும். சில சமயங்களில் விழுங்குவது அல்லது பேசுவது கூட உங்களுக்குக் கடினமாக இருக்கலாம். தொண்டை பார்ப்பதற்கு சிவப்பு நிறத்தில் இருக்கும், டான்சில்ஸில் வெள்ளை திட்டுகள் உருவாகும். வைரஸால் ஏற்படும் தொண்டை புண்ணில் இருப்பதைவிட தொண்டை அழற்சியில் திட்டுகள் மிகவும் பொதுவாகக் காணப்படும்.

கடுமையான சந்தர்ப்பங்களில் உங்களுக்கு மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், தும்மல், இருமல், காய்ச்சல், குளிர், கரகரப்பான குரல் உடல் வலி, தலைவலி மற்றும் பசியின்மை போன்ற அறிகுறிகள் உங்களுக்கு ஏற்படலாம்.  

நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சைகள்

வைரஸ் தொற்றினால் ஏற்படும் தொண்டை புண் ஒரு வாரத்திற்குள் தானாகவே சரியாகிவிடும், விழுங்குவதில் சிரமம், சுவாசிப்பதில் சிரமம், காய்ச்சல், சளியில் இரத்தம் போன்ற மோசமான அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகவும்.

அறிகுறிகள், தொண்டை பரிசோதனை மற்றும் தொண்டை அழற்சி பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு மருத்துவரால் தொண்டை அழற்சி கண்டறியப்படுகிறது.

தொண்டை வலிக்கு பயனுள்ள வீட்டு வைத்தியம்

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், போதுமான ஓய்வு எடுத்து, உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு தொற்றுநோயை எதிர்த்துப் போராட அனுமதிப்பதன் மூலம் தொண்டை புண்களுக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்கலாம்,

தொண்டை வலியைப் போக்க:

ஒரு நாளைக்கு குறைந்தது 3 முறை வெதுவெதுப்பான உப்பு நீரால் வாய் கொப்பளிக்கவும்

சூப், தேன் கலந்த இஞ்சி டீ, வெதுவெதுப்பான எலுமிச்சை டீ மற்றும் தேன் கலந்த துளசி போன்ற தொண்டையை ஆற்ற உதவும் சூடான திரவங்களை எப்போதும் குடிக்கவும்.

பாப்சிகல் அல்லது ஐஸ்கிரீம் அல்லது லோசன்ஜ்களை எடுத்துக்கொண்டு உங்கள் தொண்டையை ஆற்றவும்

உங்கள் தொண்டை சரியாகும் வரை உங்கள் குரலுக்கு ஓய்வு கொடுக்கவும்

பொறுப்புத் துறப்பு:

உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.