ஜாதிக்காய் உலகளவில் உணவு வகைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான மசாலாப் பொருளாகும். இது உணவிற்கு லேசான, இனிப்பான மற்றும் இனிமையான நறுமணத்தை அளிக்கிறது. இந்தோனேசியாவில் தோன்றிய ஜாதிக்காய், பெரும்பாலும் தென்னிந்தியா, மலேசியா மற்றும் கரீபியன் பகுதிகளில் பயிரிடப்படுகிறது.

ஜாதிக்காய் விதை Myristica fragrans இனத்தைச் சேர்ந்தது. நறுமணமுள்ள ஜாதிக்காய் தான் எப்போதும் பசுமையாக இருக்கும் உலகின் ஒரே வெப்பமண்டல மரமாகும். இது உணவிற்கு ஆரஞ்சு நிறத்தை அளிக்கிறது. இது வணிகரீதியாக நறுமண எண்ணெய் மற்றும் ஜாதிக்காய் வெண்ணெய் தயாரிப்பதற்காக வளர்க்கப்படுகிறது.

Nutmeg health benefits

ஜாதிக்காய் பேக்கரி பொருட்கள், குழம்புகள், இனிப்புகள் மற்றும் தேநீர், மல்ட் ஒயின் போன்ற பானங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஜாதிக்காய் ஒரு சக்திவாய்ந்த பாலுணர்வூட்யாகவும், செரிமானத்தைத் தூண்டுவதாகவும் செயல்படுகிறது. நறுமண எண்ணெய் தலைவலியுடன் தொடர்புடைய வலியைக் குறைக்கிறது மற்றும் ஜலதோஷம், இருமல் மற்றும் ஆஸ்துமாவுக்கு சிகிச்சையளிக்கிறது.

ஊட்டச்சத்துகள்

ஜாதிக்காய் தூளில் ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இது உங்களுக்கு பல  ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஜாதிக்காயில் உள்ள எண்ணற்ற ஊட்டச்சத்துக்களில் நார்ச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், தாமிரம், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் முக்கிய வைட்டமின்களான தியாமின், வைட்டமின் பி6, ஃபோலேட் ஆகியவை அடங்கும்.

இவை தவிர, இது சயனிடின்கள் போன்ற தாவர நிறமிகள், ஃபீனைல்ப்ரோபனாய்டுகள் மற்றும் டெர்பென்கள் போன்ற நறுமண எண்ணெய்கள் மற்றும் புரோட்டோகேட்சுயிக், ஃபெரூலிக் மற்றும் காஃபிக் அமிலங்கள் உள்ளிட்ட பீனாலிக் கலவைகள் உள்ளிட்ட ஆன்டிஆக்சிடெண்ட்கள் அதிகமாக உள்ளது. ஜாதிக்காய் தூளில் உள்ள ஈர்க்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்துவதற்கும், மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், கல்லீரல் ஆரோக்கியத்தைத் தூண்டுவதற்கும் மற்றும் வலியைக் குறைப்பதற்கும் உதவுகிறது.

ஜாதிக்காயின் ஆரோக்கிய நன்மைகள்

சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு விளைவுகள்

அழற்சி என்பது இதய நோய், நீரிழிவு மற்றும் மூட்டுவலி போன்ற பாதகமான உடல்நலப் பிரச்சனைகளுடன் தொடர்புடையது. மோனோடெர்பீன்ஸ், சபினீன், டெர்பினோல் மற்றும் பினீன் ஆகிய சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு சேர்மங்களின் செழுமை, அழற்சி நொதியின் செயல்பாட்டைத் தடுப்பதன் மூலம் வீக்கத்தைக் குறைக்கிறது. ஜாதிக்காய் பொடியில் மிரிஸ்டிசின், எலிமிசின், யூஜெனால் மற்றும் சஃப்ரோல் போன்ற எளிதில் ஆவியாகிற நறுமண எண்ணெய்கள் உள்ளன, அவை சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன் தசைகள் மற்றும் மூட்டு வலியைக் குறைக்கவும் வீக்கத்தைக் குறைக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

ஜாதிக்காயின் சக்திவாய்ந்த பாலுணர்வு பண்புகள் மூளையில் உள்ள நரம்புகளைத் தூண்டுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது மற்றும் கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்களால் மூளைக்கான டானிக்காக பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. நறுமண எண்ணெய் மனச்சோர்வு மற்றும் பதட்டத்திற்கு சிகிச்சையளிப்பதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. ஜாதிக்காய் பொடியின் அடாப்டோஜென் தன்மை தூண்டியாகவும், மயக்க மருந்தாகவும் செயல்படுகிறது. மேலும், குறிப்பிடத்தக்க பாலுணர்வு பண்புகள் பாலுணர்ச்சியை  மேம்படுத்துகிறது மற்றும் பாலியல் ஆரோக்கியத்தையும் வீரியத்தையும் மேம்படுத்துகிறது.

செரிமானத்தை மேம்படுத்துகிறது

ஜாதிக்காய் தூளின் தனித்துவமான சுவை மற்றும் நறுமணம் நம்பமுடியாத மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. மேலும் அஜீரணம், மலச்சிக்கல், வாய்வு மற்றும் புண்கள் போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதில் பயனளிக்கிறது. ஜாதிக்காயின் நறுமணம் வயிற்றுப் பிடிப்புகள், வாயுவுடன் தொடர்புடைய வலி மற்றும் வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டலுக்கு சிகிச்சையளிக்கிறது.

Nutmeg powder

பல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

வாய் துர்நாற்றம் என்பது உடலில் அதிகப்படியான நச்சுகள் குவிவதால் ஏற்படுகிறது. ஜாதிக்காய் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் இருந்து நச்சுகளை தடுத்து, உடலைச் சுத்தப்படுத்துவதாக நம்பப்படுகிறது. ஜாதிக்காயில் உள்ள சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பல் துவாரங்கள் மற்றும் ஈறு நோயை ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும். இது ஆயுர்வேத பற்பசையில் ஒரு முக்கிய மூலப்பொருளாகும், இது வாய் துர்நாற்றத்தை எதிர்த்துப் போராடும். மேலும், யூஜெனோல் எண்ணெய் பல்வலியைப் போக்க உதவுகிறது.

ஆரோக்கியமான சருமம்

ஜாதிக்காயின் ஈர்க்கக்கூடிய ஆண்டிமைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தின் இயற்கையான பளபளப்பு மற்றும் பிரகாசத்தை அதிகரிக்கின்றன. சுத்தப்படுத்தும் குணம் கரும்புள்ளிகளைத் தடுக்கிறது மற்றும் முகப்பருவுக்கு சிகிச்சையளிக்கிறது மற்றும் சருமத்துளைகளை சுத்தப்படுத்துகிறது. ஜாதிக்காய் பொடியில் உள்ள மாசிலிக்னன் என்ற உயிரியக்கக் கலவைகள், முன்கூட்டிய முதுமை தோற்றம் ஏற்படுவதைக் குறைக்க உதவுகிறது. மேலும், ஜாதிக்காய் எண்ணெயில் சருமத்திற்குப் புத்துணர்ச்சியூட்டும் பண்புகளும் நிறைந்துள்ளது.

சருமத்தை சுத்தப்படுத்த ஒரு பயனுள்ள மற்றும் எளிமையான வீட்டு வைத்தியம், ஜாதிக்காய் பொடியில் ஒரு சில துளிகள் பால் மற்றும் ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து சருமத்தின் மேல் தடவி, 10 நிமிடம் அப்படியே வைத்து, கழுவவும். இவ்வாறு செய்வதால் முகத்திற்கு உடனடி பளபளப்பு கிடைக்கும்.

முடிவுரை:

ஜாதிக்காய் பொடி மிகவும் பிரபலமான மசாலாப் பொருளாகும், இது மற்ற உணவுப் பொருட்களுடன் நன்றாக கலக்கிறது, இதனால் இது இனிப்பு மற்றும் காரமான உணவுகளில் பொதுவான உட்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இவை தவிர, ஜாதிக்காய் பொடியின் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடெண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நாள்பட்ட நோய் அபாயத்தைக் குறைப்பதில் நன்மை பயப்பதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ஜாதிக்காய் பொடியைப் பொதுவாக குறைந்த அளவுகளில் உட்கொண்டால் பாதுகாப்பானது. இருப்பினும், அதிக அளவுகளில் எடுத்துக் கொண்டால் பாதகமான விளைவுகள் ஏற்படலாம். ஜாதிக்காய் பொடியில் உள்ள மிரிஸ்டிசின் மற்றும் சஃப்ரோல் கலவைகளை அதிக அளவில் உட்கொண்டால், ​​தசை ஒருங்கிணைப்பு இழப்பு மற்றும் மாய புலனுணர்வு (ஹாலுசினேஷன்) ஏற்படலாம்.

பொறுப்புத் துறப்பு:

உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.