சிறுநீரகங்கள் சிறுநீர் மூலமாகக் கழிவுகள் மற்றும் அதிகப்படியான திரவங்களை நீக்குதல், உடல் முழுவதும் திரவ சமநிலையை பராமரித்தல் மற்றும் மிக முக்கியமாக இரத்தத்தைச் சுத்திகரித்தல் போன்ற முக்கியமான செயல்பாடுகளைச் செய்யும் முக்கிய உறுப்பு ஆகும்.

சிறுநீரக ஆரோக்கியம் உடலின் முக்கிய செயல்பாடுகளைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதோடு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கும் உதவுகிறது. சிறுநீரக ஆரோக்கியத்துடன் தொடர்புடைய முக்கிய நோய்களில் ஒன்று சிறுநீரகக் கற்கள் படிதல் ஆகும்.

kidney stone remedies

சிறுநீரக கற்கள் என்பவை உப்புக்கள் மற்றும் தாதுக்கள் படிகமாகி, கெட்டி ஆவதால் உருவாகும் படிவுகள் ஆகும். இது கால்குலை அல்லது யூரோலிதியாசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர் பாதைக்கு கல் செல்வது மிகவும் வேதனையான அனுபவம், இதற்கு உடனடி மருத்துவ உதவி தேவைப்படலாம்.

சிறுநீரகக் கற்களை வெளியேற்றுவதற்கு மருத்துவர்கள் லேப்ரோஸ்கோபி அல்லது மற்ற குறைந்தபட்ச ஊடுருவும் செயல்முறைகளைப் பரிந்துரைக்கலாம். இருப்பினும், சிறிய சிறுநீரக கற்களை அகற்றுவதற்கு உதவக்கூடிய சில இயற்கை வைத்தியங்கள் உள்ளன.

விரைவான நிவாரணம் பெற இந்த வைத்தியங்களை முயற்சிக்கும் முன் உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.

சிறுநீரக கல்லை குணப்படுத்தும் வீட்டு வைத்தியம்

  1. தண்ணீர்

உங்கள் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும், சிறுநீரக கற்களை இயற்கையாகவே அகற்றுவதற்கும் போதுமான தண்ணீரைக் குடிக்க வேண்டியது மிகவும் அவசியம். நிறைய தண்ணீர் குடிப்பது கற்கள் உருவாவதற்கு காரணமான நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை வெளியேற்றவும் உதவுகிறது.

  1. எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் சிட்ரேட் உள்ளது, இது கால்சியம் கற்களை உடைக்க உதவுகிறது. காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் மற்றும் இரவு உணவிற்கு சில மணிநேரம் முன்பு சர்க்கரை இல்லாமல் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாற்றை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இது சிறிய கற்கள் உடைப்பட உதவும்.

  1. துளசி இலைகள்

துளசி இலைகளில் உள்ள அசிட்டிக் அமிலங்கள் மற்றும் பிற இரசாயன கலவைகள் கற்களைக் கரைத்து, கற்கள் உருவாவதற்கு வழிவகுக்கும் யூரிக் அமில அளவைக் குறைக்க உதவுகிறது. காலையில் ஒரு தேக்கரண்டி துளசி சாறு பருகுவது, சிறுநீரகக் கல்லுக்கு சிகிச்சையளிப்பதற்கும் கற்கள் உருவாவதைத் தடுப்பதற்கும் உதவுகிறது.

  1. அருகம்புல்

அருகம்புல்லில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கல் உருவாவதற்கு வழிவகுக்கும் தாதுக்கள் மற்றும் உப்புகளை அகற்ற உதவுகிறது. இது சிறுநீரின் வெளியீட்டை அதிகரித்து சிறிய கற்களை அகற்ற உதவும் ஒரு நல்ல டையூரிடிக் ஆகும். தினமும் ஒரு கிளாஸ் அருகம்புல் சாற்றை உட்கொள்வது சிறுநீரக கற்களுக்கான சிகிச்சையில் உதவும்.

  1. டேன்டேலியன் வேர் சாறு

டேன்டேலியன் சாறு பித்த சுரப்பை அதிகரிக்கவும், உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும் உதவுகிறது. 2-4 கப் டேன்டேலியன் டீ குடிப்பது கல் உருவாவதைத் தடுக்க சிறந்த வழியாகும்.

  1. மாதுளை சாறு

மாதுளை சாற்றில் உள்ள வலுவான ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் கல் உருவாவதைத் தடுக்க உதவுவதோடு, கற்கள் எளிதில் வெளியேறுவதற்கும் உதவுகிறது. அதிகபட்ச பலன்களைப் பெற மாதுளைப்பழம் அல்லது சாறை விதைகளுடன் உட்கொள்ளுங்கள்.

பொறுப்புத் துறப்பு:

உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.