எப்சம் உப்பு அல்லது மெக்னீசியம் சல்ஃபேட் என்பது மாற்றுச் சிகிச்சைகளிலும், தோல் பராமரிப்பு சிகிச்சைகளிலும் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் படிகங்கள் ஆகும். நம் அன்றாட உணவில் எப்சம் உப்பை எப்படி பயன்படுத்துவது என்பதைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரியாது. இது முக்கியமாக குளியல் உப்பு கலவைகள், கால்களை ஊறவைப்பதற்கான கலவைகள், பாடி வாஷ்கள், பாடி லோஷன்கள் மற்றும் எண்ணெய்களில் முக்கிய அங்கமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த உப்புக் கலவை மன அழுத்தம் மற்றும் தசை வலியைக் குறைத்தல் போன்ற அற்புதமான பலன்களை வழங்குகிறது, மேலும் பரபரப்பான நாளுக்குப் பிறகு உங்களை அமைதியாகவும் நிதானமாகவும் வைத்திருக்கும். ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தையும் அழகையும் மேம்படுத்துவதற்கான நம்பமுடியாத ஆற்றலைக் கொண்டிருக்கும் எப்சம் உப்பு ஸ்பாவில் மிக முக்கியமான மூலப்பொருளாகக் கருதப்படுகிறது.
main

எப்சம் உப்பின் பல நன்மைகளையும் பயன்களையும் பற்றி விரிவாக அறிய இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

எப்சம் உப்பு என்றால் என்ன?

எப்சம் உப்பு வேதியியல்ரீதியாக மெக்னீசியம் சல்ஃபேட் என்று அழைக்கப்படுகிறது, இது தண்ணீரில் உடைந்து மெக்னீசியம் மற்றும் சல்ஃபேட் அயனிகளைத் தணிக்கும் பொருளாகச் செயல்படுகிறது மற்றும் சருமத்தின் அடர்த்தியான அடுக்குகள் வழியாக பரவுகிறது. உப்பு சருமத்தில் படும்போது, ​​அயனிகள் பல தோல் அடுக்குகள் வழியாக பயணித்து, GI பாதையில் எந்தத் தொடர்பும் இல்லாமல் இரத்த ஓட்டத்தை அடைகின்றன. மெக்னீசியத்தின் இந்த டிரான்ஸ்டெர்மல் இயக்கம் எப்சம் உப்பை ஹைப்போமெக்னீசிமியா சிகிச்சைக்கு ஓர் அத்தியாவசிய மருந்தாக மாற்றுகிறது.

எப்சம் உப்பு சருமத்திற்கு அளிக்கும் நன்மைகள்

முகப்பருவை எதிர்க்கிறது

எப்சம் உப்பின் உயர் கரைதிறன் மதிப்பு மெக்னீசியம் விரைவாக உறிஞ்சப்பட உதவுகிறது. இது சருமத்தின் வீக்கத்தைக் குறைக்கவும், தடிப்புகளைத் தணிக்கவும், அழற்சியைக் குறைக்கவும் உதவுகிறது. 3 தேக்கரண்டி எப்சம் உப்பை தண்ணீரில் கலந்து பருகினால் முகப்பருக்களால் ஏற்படும் சிவத்தலைக் குறைத்து, வடுக்களையும் தழும்புகளையும் மறைய செய்யும். இவை தவிர, முகப்பருக்கள் மற்றும் உடல் பருக்களுக்கு உடனடி சிகிச்சையாகவும் இது செயல்படுகிறது, பருக்களின் மேல் தடித்த கரைசலைத் தடவுங்கள் அல்லது ஃபேஸ் மாஸ்காகப் பயன்படுத்துங்கள்.

இறந்த சரும அணுக்களை நீக்குகிறது

சருமத்தின் இறந்த செல்கள், பிளாக்ஹெட்ஸ், ஒயிட்ஹெட்ஸ் மற்றும் பிற அசுத்தங்களை மேற்பரப்பில் இருந்து அகற்றுவதற்கு சருமத்திற்கு சரியான எக்ஸ்ஃபோலியேஷன் பராமரிப்பு தேவை. எப்சம் உப்பின் கரடுமுரடான அமைப்பு சருமத்திற்கு சிறந்த இயற்கையான எக்ஸ்ஃபோலியன்டாக அமைகிறது. எப்சம் உப்பையும் உங்களுக்கு விருப்பமான கேரியர் ஆயிலையும் கலந்து, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை அகற்ற ஸ்கரப்பாக பயன்படுத்துங்கள். ஸ்க்ரப்பை சில நிமிடங்களுக்கு மெதுவாக மசாஜ் செய்து துளைகளில் உள்ள அடைப்புகளை நீக்குங்கள்.

சரும நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்கிறது

ஈஸ்ட் மற்றும் பூஞ்சை தொற்று சிகிச்சையில் எப்சம் உப்பின் சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு செயல்பாடுகள் உதவுகின்றன. இது பூஞ்சை தொற்று, அரிப்பு மற்றும் கால் நகங்களைச் சுற்றியுள்ள தோல் வீக்கத்தைத் தணிக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதியை எப்சம் உப்பின் கரைசலில் ஊறவைப்பது, உடலில் உள்ள மெக்னீசியம் உள்ளடக்கத்தை அதிகரிக்கிறது, இதனால் காயங்கள் அல்லது ஒவ்வாமைகளால் ஏற்படும் பாக்டீரியா தாக்குதல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

முதுமையான தோற்றத்தைப் பெறுவதைத் தடுக்கிறது

எப்சம் உப்பு ஸ்க்ரப் சுருக்கங்கள் மற்றும் கோடுகளை மறைப்பதற்கு பெரிதும் உதவுகிறது. நன்மை பயக்கும் சேர்மங்கள் இளம் வயதிலேயே முதுமை தோற்றத்தைத் தரும் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை எதிர்த்துப் போராடுகிறது. தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் எப்சம் உப்பைக் கலந்து முகத்தில் தடவினால், சருமத்தின் இறந்த செல்களை அகற்றி, சருமத்தின் மென்மையையும் பொலிவையும் மீட்டெடுக்க உதவுகிறது. மேலும், இது ஈரப்பதத்தை பூட்டி, சருமத்தை ஹைட்ரேட் செய்து இளமையான, பளபளப்பான சருமத்தை அளிக்கிறது.

தலையின் மேற்பகுதி ஆரோக்கியம்

எப்சம் உப்பு வலுவான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு நடவடிக்கைகளுடன் அனைத்து வகையான வீக்கம் மற்றும் தொற்றுகளை குறைக்க உதவுகிறது. அதிகப்படியான எண்ணெய் அல்லது வெளிப்புற தூண்டுதல்களால் கூந்தலுக்கு ஏற்படும் ஏதேனும் சேதம் தலையின் மேற்பகுதியில் தொடர்ந்து அரிப்பை உண்டாக்குகிறது, இதனால் உச்சந்தலையில் தொற்று ஏற்படுகிறது. எப்சம் உப்பு அரிப்புகளை போக்குவதில் அற்புதமாக செயல்படுகிறது மற்றும் தலையின் மேற்பகுதியைத் தணித்து, அரிப்பையும் வீக்கத்தையும் குறைக்கிறது. தேங்காய் எண்ணெயுடன் எப்சம் உப்பைக் கலந்து, உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்தால் சிறந்த பலன் கிடைக்கும்.

கூந்தல் வறட்சியைப் போக்குகிறது

எப்சம் உப்பை இயற்கை எண்ணெய் மற்றும் ஹேர் கண்டிஷனருடன் கலந்து பயன்படுத்தினால் கூந்தலுக்கு ஈரப்பதம் கிடைக்கும். இது கூந்தலை மென்மையாக்கி, பளபளப்பாகவும், சிக்கு இல்லாததாகவும் மாற்றுகிறது. இது தவிர, இது கூடுதல் பவுன்ஸ் மற்றும் அடர்த்தியைச் சேர்க்கிறது மற்றும் கூந்தல் இழைகளை வேர்களிலிருந்து பலப்படுத்துகிறது.

தற்காப்பு நடவடிக்கைகள்

எப்சம் உப்பைப் பூசுவது பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான மக்களால் நன்கு பொறுத்துக்கொள்ளப்படுவதாகவும் கருதப்படுகிறது. இருப்பினும், எப்சம் உப்பை நன்கு கழுவவில்லை என்றால், சருமத்தில் வறட்சியான, சங்கடமான உணர்வு ஏற்படும். சிலருக்கு எப்சம் உப்பு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம், நீங்கள் படை நோய், சொறி அல்லது உதடு அல்லது நாக்கில் வீக்கம் போன்ற பக்கவிளைவுகளை அனுபவித்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்.

பொறுப்புத் துறப்பு:

உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.