தாவர ஸ்டெரால்கள் அல்லது பைட்டோஸ்டெரால்கள் (Phytosterols) என்பது தாவரங்களின் செல்கள் சவ்வுகளில் இயற்கையாகக் காணப்படும் சேர்மங்களாகும். இவை கொலஸ்ட்ராலுக்கு ஒத்த வேதியியல் அமைப்பைக் கொண்டிருந்தாலும், உடலுக்கு தீங்கு விளைவிக்காமல், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றன. குறிப்பாக, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கெட்ட கொலஸ்ட்ரால் (LDL) அளவைக் குறைக்கவும் உதவுகின்றன.
இந்தக் கட்டுரையில் தாவர ஸ்டெரால்களின் வகைகள், ஆரோக்கிய நன்மைகள், பயன்பாடுகள், உணவு மூலங்கள் மற்றும் பக்கவிளைவுகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
தாவர ஸ்டெரால்கள் என்றால் என்ன?
தாவர ஸ்டெரால்கள் என்பவை கொலஸ்ட்ராலை ஒத்த உயிர்ச்சேர்மங்களாகும். இவை குறைந்த அளவில் பல்வேறு பழங்கள், காய்கறிகள், பருப்புகள், விதைகள், மற்றும் தாவர எண்ணெய்களில் காணப்படுகின்றன.
ஃபைட்டோஸ்டெரால்களின் வகைகள்
இதுவரை 250-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான தாவர ஸ்டெரால்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் பொதுவாக காணப்படும் சில:
- பீட்டா-சிடோஸ்டெரால் (Beta-sitosterol)
- பீட்டா-சிடோஸ்டானால் (Beta-sitostanol)
- காம்பெஸ்டானால் (Campestanol)
- காம்பெஸ்டெரால் (Campesterol)
- ஸ்டிக்மாஸ்டெரால் (Stigmasterol)
இவை குடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவதை தடுக்கும் தன்மை கொண்டவை.
தாவர ஸ்டெரால்களின் ஆரோக்கிய நன்மைகள்
-
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்
தினசரி சுமார் 2 கிராம் அளவில் எடுத்துக்கொண்டால், குடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவதைத் தடுக்கும். இதன் மூலம் LDL கொலஸ்ட்ரால் 10–15% வரை குறையலாம்.
-
இதய நோய்களைத் தடுக்கும்
கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்பட்டு, அத்தெரோஸ்க்ளெரோசிஸ் (artery-கள் அடைதல்) மற்றும் இதய நோய் அபாயம் குறையும்.
-
புரோஸ்டேட் ஆரோக்கியத்திற்கு உதவும்
பீட்டா-சிடோஸ்டெரால், புரோஸ்டேட் பெரிதாகுதல் (BPH) அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.
-
அழற்சி மற்றும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸைக் குறைக்கும்
தாவர ஸ்டெரால்கள் உடலில் அழற்சி மற்றும் ஆக்ஸிடேட்டிவ் பாதிப்பை குறைத்து, நீரிழிவு, அதிக எடை, மற்றும் சில வகை புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகின்றன.
தாவர ஸ்டெரால்களின் பயன்பாடுகள்
-
இயற்கையான உணவுகள் மற்றும் செறிவூட்டப்பட்ட உணவுகள்
- ஆரஞ்சு ஜூஸ்
- தயிர்
- சீரியல் உணவுகள்
-
உணவு சப்ளிமென்ட்கள்
தாவர ஸ்டெரால்கள் கேப்சூல்கள் அல்லது மாத்திரைகள் வடிவில் கிடைக்கின்றன. அவற்றின் பயன்கள்:
- கொழுப்பு அளவை கட்டுப்படுத்துகிறது
- புரோஸ்டேட் ஆரோக்கியத்தைப் பேணுகிறது
- இதய செயல்பாட்டை ஆதரிக்கிறது
- சரும பராமரிப்பிற்கு உதவுகின்றன
அழற்சி எதிர்ப்பு தன்மை காரணமாக சருமப் பராமரிப்பு பொருட்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.
பக்கவிளைவுகள்
பொதுவாக தாவர ஸ்டெரால்கள் பாதுகாப்பானவையாக கருதப்படுகின்றன. எனினும் சிலருக்கு:
- வாந்தி
- வயிற்றுப்போக்கு
- வாயு அல்லது வயிறு உப்புசம்
போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
அதிகமாக எடுத்துக்கொண்டால், A, D, E, K போன்ற கொழுப்பு கரையக்கூடிய வைட்டமின்கள் மற்றும் பீட்டா-கரோட்டீன் குறைந்து விடும் அபாயம் உண்டு.
சிடோஸ்டெரோலீமியா (Sitosterolemia) என்ற அரிய மரபணு நோயாளிகள் தாவர ஸ்டெரால் சப்ளிமென்ட்களைத் தவிர்க்க வேண்டும்.
இயற்கையான தாவர ஸ்டெரால் மூலங்கள்
- கோதுமை முளை எண்ணெய்
- எள் விதைகள்
- சூரியகாந்தி விதைகள்
- பிஸ்தா
- சோயா பீன்ஸ்
- வேர்க்கடலை
- ஆலிவ் எண்ணெய்
- பழங்கள்
- பருப்புகள்
குறிப்பு: தினசரி 2 கிராம் அளவு பெற, செறிவூட்டப்பட்ட உணவுகள் அல்லது சப்ளிமென்ட்கள் அவசியமாகத் தேவைப்படும்.
முடிவுரை
தாவர ஸ்டெரால்கள், இயற்கையாகவே கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். ஆனால், இவை ஒருவரின் நல்ல உணவு முறை, உடற்பயிற்சி செய்வது, புகை/மதுவை தவிர்ப்பது போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பொறுத்தே பயனளிக்கும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. தாவர ஸ்டெரால்கள் கொலஸ்ட்ராலைப் போன்றவையா?
இல்லை. அமைப்பில் ஒத்ததாக இருந்தாலும், விலங்கிலிருந்து பெறப்படும் கொலஸ்ட்ராலைப் போல் அல்லாமல், தாவர ஸ்டெரால்கள் கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.மிகக் கடினம். அதனால் இதற்கு செறிவூட்டப்பட்ட உணவுகள் அல்லது சப்ளிமென்ட்கள் தேவைப்படும்.
3. யார் தவிர்க்க வேண்டும்?
சிட்டோஸ்டெரோலெமியா உள்ளவர்கள் அல்லது சில கொழுப்புக் கரைக்கும் மருந்துகளை எடுக்கும் நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி எடுத்துக்கொள்ளக் கூடாது.
பொறுப்புத் துறப்பு:
உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.