நம்மில் பலருக்கு முதுமையான தோற்றம் குறித்த பயம் உள்ளது. நாம் அனைவரும் இளமையாக இருக்க விரும்புகிறோம், இதனால் முதுமையான தோற்றத்தைத் தாமதப்படுத்தக்கூடிய அல்லது மாற்றியமைக்கக்கூடிய வழிகளைத் தொடர்ந்து தேடுகிறோம். பொலிவான சருமத்தைப் பெற, நமது சரும ஆரோக்கியத்திற்குப் பயனளிக்கக்கூடிய அழகுப் பொருட்களை நாம் பயன்படுத்துகிறோம்.
வைட்டமின் சி, சரும அமிலங்கள் மற்றும் ரெட்டினாய்டுகள் பல்வேறு சரும பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் மற்றும் ஒட்டுமொத்த தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திறனைக் கொண்டிருப்பதால் பெரும் புகழ் பெற்றுள்ளன. வைட்டமின் சி, ரெட்டினால் மற்றும் சரும அமிலங்கள் உள்ள தயாரிப்புகளை உங்கள் தினசரி சரும பராமரிப்பு வழக்கத்தில் சேர்ப்பது சுருக்கங்களையும் கோடுகளையும் தாமதப்படுத்த உதவும், ஆனால் கேள்வி என்ன பயன்படுத்த வேண்டும், எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதுதான். இந்தக் கட்டுரையில், இந்தப் பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கான உகந்த வயதையும், அவை உங்கள் சருமத்திற்கு வழங்கும் 5 நன்மைகளையும் குறித்து பார்ப்போம்.
சரும அமிலங்களை எப்போது பயன்படுத்தத் தொடங்குவது?
இந்த சக்திவாய்ந்த கூறுகளை உங்கள் சரும பராமரிப்பு வழக்கத்தில் சேர்க்க சரியான வயதை தீர்மானிப்பது அவசியம். சரும அமிலங்கள் மற்றும் ரெட்டினாய்டுகளைத் தொடங்குவதற்கான சரியான வயது சருமத்தின் தொனி மற்றும் வகையைப் பொறுத்து மாறுபடும் என்றாலும், பெரும்பாலும், பின்வரும் வயது வகைகளில் அவற்றைப் பயன்படுத்தத் தொடங்குங்கள்:
வைட்டமின் சி
வைட்டமின் சி என்பது சருமத்தைப் பிரகாசமாக்கும் மற்றும் வயது முதிர்ந்த தோற்றத்தைத் தடுக்கும் பண்புகளையும் கொண்ட சக்திவாய்ந்த ஆன்டிஆக்சிடன்ட் ஆகும். இந்தக் கூறுகளை பயன்படுத்த தொடங்குவதற்குக் குறிப்பிட்ட வயதுத் தேவை இல்லை என்றாலும், உங்கள் இருபது வயதிலேயே இதை உங்கள் தோல் பராமரிப்பு முறைமையில் சேர்த்துக்கொள்ள நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர், ஏனெனில் இது ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்துப் போராடவும், சுற்றுச்சூழலினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கவும், கொலாஜன் உற்பத்தியைத் தூண்டவும் உதவும்.
சருமத்திற்கான அமிலங்கள்
AHAகள் (ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள்) மற்றும் BHAகள் (பீட்டா ஹைட்ராக்ஸி அமிலங்கள்) போன்ற சருமத்திற்கான அமிலங்கள், இறந்த சரும செல்களை அகற்றவும், துளைகளில் உள்ள அழுக்கை நீக்கவும், சரும புதுப்பிப்பை ஊக்குவிக்கவும் உதவும் எக்ஸ்ஃபோலியேட்டர்கள் ஆகும். உங்கள் வழக்கத்தில் சருமத்திற்கான அமிலங்களை அறிமுகப்படுத்துவதற்கான உகந்த வயது உங்கள் சரும வகை மற்றும் பிரச்சினைகளைப் பொறுத்தது. பொதுவாக, கிளைகோலிக் அமிலம் போன்ற AHAகள் கொண்ட மென்மையான எக்ஸ்ஃபோலியன்டுகளையோ அல்லது சாலிசிலிக் அமிலம் போன்ற BHAகளையோ உங்கள் முப்பது வயதின் துவக்கத்தில் சேர்க்கத் தொடங்கலாம். இருப்பினும், அதிகப்படியான எக்ஸ்ஃபோலியேஷன் மற்றும் எரிச்சலைத் தவிர்க்க அவற்றை எச்சரிக்கையுடன் பயன்படுத்தவும்.
ரெட்டினாய்டுகள்
வைட்டமின் ஏ-யிலிருந்து பெறப்பட்ட ரெட்டினாய்டுகள், முகப்பரு, கோடுகள் மற்றும் மிகை நிறமியாக்கம் உள்ளிட்ட எண்ணற்ற தோல் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதாக அறியப்படுகிறது. ரெட்டினாய்டுகள் சக்திவாய்ந்த முதுமை தோற்ற எதிர்ப்பு உட்பொருட்கள் என்றாலும், அவை சருமத்தில், குறிப்பாக இளைஞர்களுக்கு, கடுமையானதாகவும் இருக்கலாம். சரும மருத்துவர்கள் பெரும்பாலும் ரெட்டினாய்டுகளை முப்பது வயதுக்கு முன்பே அறிமுகப்படுத்த பரிந்துரைக்கின்றனர், ஏனெனில் அப்போதுதான் கொலாஜன் உற்பத்தி குறையத் தொடங்குகிறது, மேலும் முதிய வயதிற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரியும். குறைந்த செறிவுடன் தொடங்கி, வறட்சி மற்றும் எரிச்சல் போன்ற சாத்தியமான பக்கவிளைவுகளைக் குறைக்க படிப்படியாக அதனைப் பயன்படுத்தும் கால இடைவெளியை அதிகப்படுத்துங்கள்.
வைட்டமின் சி, தோல் அமிலங்கள் மற்றும் ரெட்டினாய்டுகளின் 5 நன்மைகள்
முகத்திற்குப் பொலிவு தருவது முதல் முதல் முதுமையான தோற்றம் மற்றும் முகப்பருவின் அறிகுறிகளை எதிர்த்துப் போராடுவது வரை, இந்த கூறுகள் உங்கள் சருமத்திற்கு ஏராளமான நன்மைகளைத் தரும். அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்:
சருமத்திற்குப் பொலிவைத் தருகிறது
வைட்டமின் சி மெலனின் உற்பத்தியைத் தடுக்கிறது, இது சருமத்தின் நிறத்தை மேலும் சீராக மாற்றுவதற்கும், கரும்புள்ளிகள் மற்றும் மிகை நிறமியாக்க தோற்றத்தைக் குறைப்பதற்கும் வழிவகுக்கிறது. வழக்கமான பயன்பாடு சருமத்திற்கு ஒரு பிரகாசமான பளபளப்பை அளிக்கும், இதன் விளைவாக இளமையான, பொலிவான தோற்றம் கிடைக்கும்.
சரும அமைப்பை மேம்படுத்துகிறது
AHAகள் மற்றும் BHAகள் போன்ற தோல் அமிலங்கள், சருமத்தின் மேற்பரப்பை உரித்தல், செல்களைப் புதுப்பித்தல் ஆகியவற்றை ஊக்குவித்து, மென்மையான, மிருதுவான சருமத்தை வெளிப்படுத்துவதன் மூலம் செயல்படுகின்றன. இது சருமத்தின் அமைப்பைச் செம்மைப்படுத்தவும், துளைகளின் தோற்றத்தைக் குறைக்கவும், ஒட்டுமொத்த சருமத் தெளிவை அதிகரிக்கவும் உதவுகிறது.
கோடுகளையும் சுருக்கங்களையும் குறைக்கிறது
ரெட்டினாய்டுகள் கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுவதற்கும், செல் புதுப்பித்தலை துரிதப்படுத்துவதற்கும் பெயர் பெற்றவை, இதன் விளைவாக கோடுகள் மற்றும் சுருக்கங்கள் குறைந்து உறுதியான, பளபளப்பான சருமத்தைத் தருகிறது.
முகப்பருக்களையும் வெடிப்புகளையும் எதிர்த்துப் போராடுகிறது
வைட்டமின் சி மற்றும் ரெட்டினாய்டுகள் முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமத்தை அமைதிப்படுத்தவும், வெடிப்புகள் ஏற்படுவதைக் குறைக்கவும் உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. கூடுதலாக, சாலிசிலிக் அமிலம் போன்ற BHAகள் துளைகளில் ஆழமாக ஊடுருவி அவற்றை சுத்தம் செய்து, புள்ளிகள் ஏற்படுவதைத் தடுக்கின்றன.
சுற்றுச்சூழல் மாசுவிலிருந்து பாதுகாக்கிறது
வைட்டமின் சி ஒரு சக்திவாய்ந்த ஆன்டிஆக்சிடென்டாகும், இது UV கதிர்வீச்சு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுத்திகளால் உருவாகும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவும். இது சருமத்தை ஆக்சிடேட்டிவ் அழுத்தம் மற்றும் முன்கூட்டிய முதுமை தோற்றத்திலிருந்தும் பாதுகாக்கிறது.
முன்னெச்சரிக்கைகள்
ரெட்டினாய்டுகளுடன் கூடிய AHAகள் மற்றும் BHAகள் போன்ற தோல் அமிலங்கள் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கினாலும், அவை சரும ஆரோக்கியத்தில் சாத்தியமான பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும். இந்த சக்திவாய்ந்த பொருட்களை அதிகமாகப் பயன்படுத்துவது எரிச்சல், சிவத்தல் மற்றும் சென்சிட்டிவிட்டி ஆகியவற்றை ஏற்படுத்தும், குறிப்பாக சென்சிட்டிவான சருமம் உள்ளவர்களுக்கு இவற்றை ஏற்படுத்தும். பாதகமான எதிர்விளைவுகளைக் குறைக்கவும், சரும ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் இந்த உட்பொருட்களைக் கவனமாகப் பயன்படுத்தவும், படிப்படியாக அறிமுகப்படுத்தவும். சரும மருத்துவருடன் கலந்தாலோசிப்பது அபாயங்களைக் குறைக்கவும், பாதுகாப்பான தோல் பராமரிப்பு அணுகுமுறையை உறுதி செய்யவும் உதவும்.
பொறுப்புத் துறப்பு:
உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.