எந்த காரணமும் இல்லாமல் நீங்கள் தொடர்ந்து மனச்சோர்வு, எரிச்சல் மற்றும் மோசமான மனநிலை மாற்றங்களால் அவதிப்படுகிறீர்களா? சரி, இது செரோடோனின் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.

மிகவும் சக்தி வாய்ந்த நரம்பியக்கடத்தி, பெரும்பாலும் இரைப்பைக் குழாயின் (ஜிஐ) உட்பூச்சில் உற்பத்தி செய்யப்படுகிறது, தூக்க முறைகளை ஒழுங்குபடுத்துதல், செரிமானத்தை மேம்படுத்துதல் மற்றும் உங்கள் மனநிலையை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதில் செரோடோனின் முக்கிய பங்கு வகிக்கிறது.
Srotinine foods
உடல் போதுமான செரோடோனினை உற்பத்தி செய்யத் தவறினால், அது உடலின் வழக்கமான செயல்பாடுகளைத் தொந்தரவு செய்யக்கூடிய செரோடோனின் குறைபாட்டை ஏற்படுத்தும். உண்மையில், விஞ்ஞானிகள் செரோடோனின் செயல்பாடுகள் மிகவும் சிக்கலானவை என்று நம்புகிறார்கள் மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் செரோடோனின் பங்கு பெரும்பாலும் மருத்துவத் துறையில் விவாதப் பொருளாகவே உள்ளது.

உங்களிடம் செரோடோனின் அளவு நன்றாக இருந்தால், நீங்கள் மகிழ்ச்சியான நபர் என்று அர்த்தம், இது நீங்கள் நீண்ட காலம் வாழ உதவும்.

உணவுகளின் உதவியுடன் இயற்கையாக செரோடோனின் அளவை எவ்வாறு தூண்டுவது என்பதை அறிய, தொடர்ந்து படிக்கவும்.

செரோடோனின் சில முக்கிய செயல்பாடுகளை உள்ளடக்கியது:

  • சர்க்காடியன் சுழற்சியை ஒழுங்குபடுத்துவதன் மூலம் ஆழ்ந்த தூக்கத்தை அளிக்கிறது
  • பசியுணர்வை மேம்படுத்துகிறது
  • கற்றல் மற்றும் நினைவாற்றல் திறன்களை அதிகரிக்கிறது
  • நேர்மறையான அணுகுமுறையை உருவாக்குகிறது மற்றும் சமூக நடத்தையை மேம்படுத்துகிறது

மறுபுறம், உங்கள் செரோடோனின் அளவுகள் மிகவும் குறைவாக இருந்தால், பின்வரும் அறிகுறிகளை நீங்கள் அனுபவிக்கலாம்:

  • கவலையாகவும் மனச்சோர்வாகவும் உணர்வது
  • எரிச்சலுணர்வு மற்றும் முரட்டுத்தனம்
  • தூக்க முறையில் பாதிப்பு மற்றும் அதீத சோர்வு உணர்வு
  • பசியின்மை
  • குமட்டல், வாந்தி மற்றும் பிற செரிமான பிரச்சினைகள்
  • சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளைச் சாப்பிட ஏங்குவது

சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்வதன் மூலம் செரோடோனின் அளவை மேம்படுத்தலாம். மேலும், ட்ரிப்டோஃபன் என்னும் அமினோ அமிலங்கள் நிறைந்த உணவுகளைச் சேர்ப்பதே செரோடோனின் அளவை அதிகரி்ப்பதற்கான இயற்கையான வழியாகும். செரோடோனின் முக்கியமாக டிரிப்டோஃபானில் இருந்து ஒருங்கிணைக்கப்படுகிறது.

செரோடோனின் அளவை அதிகரிப்பதற்கான சிறந்த வழி டிரிப்டோபான் நிறைந்த உணவுகளை உண்பது. நீங்கள் குறைந்த டிரிப்டோஃபான் உணவை உட்கொண்டால், உங்கள் உடலில் செரோடோனின் அளவு பெருமளவு குறையும் என்று பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

செரோடோனின் அளவை அதிகரிக்கக்கூடிய 5 உணவுகள்:

  1. முட்டை

முட்டையில் புரதம் நிறைந்துள்ளது. மேலும் இது டிரிப்டோஃபானின் இரத்த பிளாஸ்மா அளவுகளைக் கணிசமாக அதிகரிக்கும். முட்டையின் மஞ்சள் கருவில் டிரிப்டோபான், டைரோசின், கோலின், பயோட்டின், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் அதனைத் தவிர்க்க வேண்டாம். முட்டையில் உள்ள ஊட்டச்சத்துகள் மற்றும் ஆன்டிஆக்சிடெண்ட்களின் இந்த அற்புதமான கலவையானது செரோடோனின் அளவு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

  1. சீஸ்

சீஸில் டிரிப்டோஃபான் மிகுதியாக இருப்பதால், செரோடோனின் அளவை அதிகரிக்க உங்கள் உணவில் சேர்க்கப்பட வேண்டிய சரியான உணவு சீஸ் ஆகும். உங்கள் டிரிப்டோஃபான் அளவை அதிகரிக்க உங்கள் பிரெட்டில் சீஸ் சேர்த்திடுங்கள்.

  1. சோயா

சோயா பொருட்களில் அதிக அளவில் டிரிப்டோஃபான் உள்ளது. டோஃபுவில் டிரிப்டோஃபான் இருப்பதால் சைவ உணவு உண்பவர்களுக்கு இது பலனளிக்கிறது.

4.கொட்டைகள்

அனைத்து கொட்டைகள் மற்றும் விதைகளிலும் டிரிப்டோஃபான் இருப்பதால், இவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் உணவுத் திட்டத்தில் ஒரு பிடி கொட்டைகளைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் மனநிலை, தூக்க முறை மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு மேம்படும் என்பதற்கான சான்றுகள் உள்ளன.

  1. அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத்தில் ப்ரோமிலைன் மட்டுமல்லாமல் டிரிப்டோஃபானும் நிறைந்துள்ளது. இது, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உங்கள் உணவில் ருசியான அன்னாசிப்பழத்தைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் மனநிலை மற்றும் தூக்க முறை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படும்.

இருப்பினும், டிரிப்டோஃபான் நிறைந்த உணவுகளுடன் கார்போஹைட்ரேட்டுகளை சாப்பிடுவது உங்கள் மூளையில் டிரிப்டோஃபானை அதிகரிக்க உதவும். எனவே, 25-30 கிராம் கார்போஹைட்ரேட் உணவுடன் டிரிப்டோஃபான் நிறைந்த உணவுகளை உட்கொள்ள முயற்சிக்கவும்.

உங்கள் டிரிப்டோஃபான் அளவை அதிகரிக்க சில சிற்றுண்டி யோசனைகளை இங்கே அளிக்கிறோம்:

முழு கோதுமை பிரெட் சீஸ் டோஸ்ட்

ஒரு பிடி கொட்டைகளுடன் ஓட்மீல்

உங்கள் சுவையான முறுக்குகளுடன் அன்னாசிப்பழம்

முட்டை, பால் மற்றும் சீஸ் சேர்த்த பாம்பே டோஸ்ட்

டோஃபு ரோல்

பொறுப்புத் துறப்பு:

உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.