மழைக்காலம், கோடை வெப்பத்திலிருந்து நிவாரணத்தையும், குளிர்ச்சியான வானிலையையும் கொண்டு வருகிறது. இருப்பினும், இது நம்மில் பலருக்கு எளிதில் நோய்த்தொற்றுகள் மற்றும் உடல்நல சவால்களை ஏற்படுத்தும் காலமும் கூட. சுற்றுச்சூழலில் உள்ள அதிக ஈரப்பதம் பல வைரஸ் தொற்றுகள், செரிமானப் பிரச்சனைகள் மற்றும் நீர் மூலம் பரவும் நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே, இந்தப் பருவத்தில் சமச்சீரான உணவை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி, பருவகால நோய்களைத் தவிர்க்க உதவும்.
diet for viral fever

மழைக்கால வைரஸ் காய்ச்சல் என்றால் என்ன?

மழைக்கால காய்ச்சல் என்பது மழைக்காலத்தில் பரவலாகக் காணப்படும் பல்வேறு வகையான வைரஸ் தொற்றுகளைக் குறிக்கிறது. இன்ஃப்ளூயன்ஸா, டெங்கு, டைபாய்டு, சிக்குன்குனியா, இரைப்பை குடல் அழற்சி மற்றும் மலேரியா ஆகியவை வைரஸ்களால் ஏற்படும் நோய்களில் சிலவாகும். அதிக ஈரப்பதம், நீர் தேக்கம் மற்றும் மோசமான சுகாதாரம் ஆகியவை வைரஸ்கள் மற்றும் கொசுக்கள் போன்ற நோய்க்கிருமிகள் பெருகும் இடமாக மாறுகின்றன.

காரணங்கள்

  • நீர் தேக்கம்: தேங்கி நிற்கும் நீரில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்து, டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்களைப் பரப்புகின்றன.
  • மாசுபட்ட நீர் மற்றும் உணவு: அசுத்தமான நீர் மற்றும் உணவு, டைபாய்டு மற்றும் இரைப்பை குடல் அழற்சி போன்ற நோய்த்தொற்றுகளின் அபாயத்தை அதிகரிக்கின்றன.
  • மோசமான சுகாதாரம் மற்றும் ஈரமான சூழல்: மோசமான சுகாதாரம் மற்றும் ஈரமான சூழல் காற்றின் மூலம் பரவும் வைரஸ்களை எளிதில் பரப்புகின்றன.
  • பருவகால மாற்றங்கள்: பருவகால மாற்றங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து, நோய்த்தொற்றுகள் எளிதில் தாக்க வழிவகுக்கும்.

பொதுவான அறிகுறிகள்

நோய்த்தொற்று ஏற்பட்ட 2-4 நாட்களுக்குள் அறிகுறிகள் பொதுவாகத் தோன்றும், அவை:

  • திடீரென்று அதிக காய்ச்சல்
  • குளிர் மற்றும் உடல் வலி
  • தொண்டை வலி அல்லது வறட்டு இருமல்
  • மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு
  • தலைவலி
  • சோர்வு மற்றும் பலவீனம்
  • குமட்டல் அல்லது வாந்தி
  • சில சமயங்களில் வயிற்றுப்போக்கு

காய்ச்சல் 3 நாட்களுக்கு மேல் நீடித்தால் அல்லது சொறி, கடுமையான உடல் வலி அல்லது இரத்தம் கசிதல் போன்ற அறிகுறிகளுடன் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும். இது டெங்கு அல்லது வேறு ஏதேனும் தீவிர நோய்த்தொற்றின் அறிகுறியாக இருக்கலாம்.

உணவு கட்டுப்பாடு

நல்ல ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான உணவு, நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதன் மூலம் விரைவாக குணமடைய உதவும். எவற்றைச் சாப்பிட வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதை காணலாம்:

சாப்பிட வேண்டிய உணவுகள்

  • சூடான திரவங்கள்: இஞ்சி, துளசி அல்லது மஞ்சள் போன்ற மூலிகை டீக்கள், தேன் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றைச் சேர்த்து அருந்துவது தொண்டை வலியைப் போக்கவும், சளியைக் குறைக்கவும், உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவும். மேலும், காய்கறி அல்லது சூப் வகைகள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க நல்ல தேர்வாகும்.
  • எளிதில் செரிமானமாகும் உணவுகள்: கிச்சடி, அரிசி கஞ்சி, உப்புமா, இட்லி மற்றும் ரொட்டி போன்ற மென்மையான, எளிதில் செரிமானமாகும் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் விரைவாக குணமடைவதற்குத் தேவையான ஆற்றலை வழங்கும்.
  • வைட்டமின் சி நிறைந்த உணவுகள்: ஆரஞ்சு, பப்பாளி, கொய்யா, நெல்லிக்காய், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, காலிஃபிளவர் மற்றும் குடைமிளகாய் போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்ப்பது வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவும், நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவும்.
  • ப்ரோபயாடிக்குகள்: ப்ரோபயாடிக்குகள் குடல் ஆரோக்கியத்தையும் செரிமான செயல்பாட்டையும் மேம்படுத்தும் நன்மை தரும் குடல் பாக்டீரியாக்கள் ஆகும். தயிர், மோர் அல்லது யோகர்ட் போன்ற ப்ரோபயாடிக் நிறைந்த உணவுகளைச் சேர்ப்பது செரிமானப் பிரச்சனைகளை எளிதாக்கவும், விரைவாக குணமடையவும் உதவும்.
  • இளநீர்: இளநீரில் இயற்கையான எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்துள்ளன. இது இழந்த திரவங்களைத் திரும்ப பெறவும், எலக்ட்ரோலைட் சமநிலையின்மையை சரிசெய்யவும், நீர்ச்சத்தைப் பெறவும் உதவும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

  • எண்ணெய் மற்றும் பொரித்த உணவுகள்: செரிமானத்தை மெதுவாக்கி, அழற்சியை மோசமாக்கும்.
  • குளிர்ந்த அல்லது குளிரூட்டப்பட்ட உணவுகள்: தொண்டையில் நோய்த்தொற்றுகளைத் தூண்டும்.
  • தெரு உணவுகள் மற்றும் பச்சைக் காய்கறி சாலடுகள்: இவை பாக்டீரியாக்களின் புகலிடமாக இருக்கலாம் மற்றும் மழைக்காலத்தில் எளிதில் கெட்டுப்போகலாம். இந்த உணவுகளை உட்கொள்வது வயிற்றுப்போக்கு மற்றும் நோய்த்தொற்றுகளின் அபாயத்தை அதிகரிக்கும்.
  • காஃபின் மற்றும் சர்க்கரை பானங்கள்: அதிக அளவில் உட்கொள்ளும் போது நீர்ச்சத்தை இழக்க வழிவகுக்கும்.

கூடுதல் குறிப்புகள்

  • உடலை நீரேற்றமாக வைத்திருக்க தினமும் குறைந்தது 8-10 கிளாஸ் சுத்தமான, கொதிக்கவைத்த அல்லது வடிகட்டிய தண்ணீரைக் குடிக்கவும்.
  • உடலுக்கு ஓய்வு தேவை, எனவே விரைவான குணமடைதலுக்குப் போதுமான நல்ல தரமான தூக்கத்தைப் பெறுங்கள்.
  • கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு, சமைப்பதற்கு முன், சாப்பிடுவதற்கு முன் கைகளை அடிக்கடி கழுவுங்கள் மற்றும் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்கவும்.
  • சுய மருத்துவம் செய்வதைத் தவிர்க்கவும்; நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அல்லது வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு முன் எப்போதும் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

பின்வரும் அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்:

  • 102°F-க்கு மேல் 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல்
  • சொறி அல்லது ஈறுகளில் இரத்தம் கசிதல் (டெங்குவின் எச்சரிக்கை அறிகுறி)
  • மூச்சுத் திணறல் அல்லது மார்பு வலி
  • தொடர்ச்சியான வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு

மழைக்கால வைரஸ் காய்ச்சலுக்கான மாதிரி உணவுத் திட்டம்

  • அதிகாலை: 6:30 – 7:30 AM
    • மஞ்சள், எலுமிச்சை கலந்த நீர் அல்லது இஞ்சி டீ 1 கப்
    • இது நச்சுக்களை வெளியேற்றி, தூக்கத்திற்குப் பிறகு உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.
  • காலை உணவு: 8:30 – 9:30 AM
    • பாசிப்பயறு கிச்சடி ½ கப் அல்லது 2 இட்லி அல்லது 2 இடியாப்பம் அல்லது வேகவைத்த காய்கறிகளுடன் ரவை உப்புமா மற்றும் பருப்பு 1 கப்
    • துளசி, இஞ்சி அல்லது இலவங்கப்பட்டை மூலிகை டீ 1 கப்
    • 1 சிறிய வாழைப்பழம்
    • சத்தான காலை உணவு ஆற்றலை அளிக்கிறது, எளிதில் செரிமானமாகிறது, மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கிறது.
  • மதிய உணவு: 11:00 AM
    • புதிய இளநீர் 1 கிளாஸ்
    • அல்லது
    • 1 கிண்ணம் காய்கறி சூப்
    • உடலை நீரேற்றமாக வைத்திருக்கிறது மற்றும் இழந்த எலக்ட்ரோலைட்டுகளை மீட்கிறது.
  • மதிய உணவு: 1:00 – 2:00 PM
    • பாசிப்பயறு பருப்பு சாதம் 1 கப் அல்லது மென்மையாக சமைத்த பருப்பு கிச்சடி 1 கப்
    • வேகவைத்த காய்கறிகள் (கேரட், சுரைக்காய், பூசணிக்காய் போன்றவை)
    • தயிர் அல்லது மோர் (சளி/இருமல் இல்லாவிட்டால் மட்டும்)
    • குடல் ஆரோக்கியத்திற்கு கார்போஹைட்ரேட்டுகள், புரதம் மற்றும் புரோபயாடிக்குகளை வழங்குகிறது.
  • மாலை: 4:30 – 5:30 PM
    • துளசி-இஞ்சி டீ அல்லது மஞ்சள் பால் 1 கப்
    • 1 துண்டு ரொட்டி டோஸ்ட் அல்லது 2-3 ஊறவைத்த பேரீச்சம்பழம் (ஆற்றலுக்கு)
    • நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கிறது மற்றும் தொண்டை அசௌகரியத்தைப் போக்குகிறது.
  • இரவு உணவு: 7:30 – 8:30 PM
    • காய்கறி பருப்பு சூப் அல்லது தெளிவான சிக்கன் சூப்
    • வேகவைத்த காய்கறிகளுடன் ரவை உப்புமா ½ கப் அல்லது பருப்பு சாம்பாருடன் 2-3 இட்லி அல்லது காய்கறியுடன் ரசம் சாதம் 1 கப்
    • காய்ச்சல் குணமாகும் போது சூடான மற்றும் எளிதில் செரிமானமாகும் உணவுகள்.

பொறுப்புத் துறப்பு:

உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.