அதிமதுர சாறு பாரம்பரிய மருத்துவத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது பல உடல்நல பிரச்சினைகளைக் குணப்படுத்துகிறது. தொண்டை புண் மற்றும் நாசி நெரிசலுக்கு சிகிச்சையளிப்பதற்கு இயற்கையான தீர்வாகப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மூலிகை அதிமதுரமாகும். யஸ்திமது என்பது அதிமதுரத்தின் தண்டிலிருந்து பெறப்படும் வேர்ப் பொடியாகும்.
இலேசான மஞ்சள் நிறத்தில், கடுமையான வாசனையுடன் உள்ள இதில் கால்சியம், கிளைசிரைசின், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளன. அதிமதுரம் சக்திவாய்ந்த மூலிகைகளில் ஒன்றாகும், இது அழற்சியைக் குறைத்தல், முகப்பருக்களை எதிர்த்துப் போராடுதல், சருமத்தை பிரகாசமாக்குதல் மற்றும் சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றுதல் உள்ளிட்ட நன்மைகளை சருமத்திற்கு வழங்குகிறது.
அதிமதுரத்தின் தாவரவியல் பெயர் Glycyrrhiza glabra. இது பல ஆண்டுகளாக பொக்கிஷமாகப் பார்க்கப்படுகிறது. இதன் தவிர்க்க முடியாத மருத்துவ மற்றும் சிகிச்சை நன்மைகளுக்காக ஆசிய நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
அதிமதுரம் தரும் 5 அழகு நன்மைகள்
ஹைப்பர்பிக்மென்டேஷனுக்குச் சிகிச்சையளிக்கிறது
ஹைப்பர்பிக்மென்டேஷன் என்பது ஒரு தோல் பிரச்சினையாகும், இதன் காரணமாகத் தோலில் கருமையான திட்டுகள் அல்லது புள்ளிகள் உருவாகின்றன, இது தோலின் நிறம் மற்றும் அமைப்பைச் சீரற்றதாக மாற்றும். அதிமதுர சாறு நிறமிகளை மாற்றியமைக்கும் அதிசயத்தைச் செய்து, சூரிய ஒளி அல்லது ஹார்மோன் மாற்றங்களால் உருவாகும் மெலஸ்மாவையும் குறைக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதியில் அதிமதுரப் பொடியைப் பூசுவதால், இயற்கையாகவே கரும்புள்ளிகள் மற்றும் திட்டுகள் மறைந்து, உங்கள் சருமத்தைப் பிரகாசமாக்கும்.
சூரிய ஒளியின் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது
சூரிய ஒளியில் தொடர்ந்து இருப்பதால் சருமம் கருப்பதோடு, வயது முதிர்ந்த தோற்றமும் ஏற்படும். அதிமதுரத்தில் கிளாப்ரிடின் என்ற பைட்டோ கெமிக்கல் கலவை உள்ளது, இது நிறமாற்றத்தைத் தவிர்க்க உதவுகிறது மற்றும் சருமத்தின் நிறத்தையும் அமைப்பையும் மேம்படுத்துகிறது. புற ஊதா கதிர்கள் தோல் நிறமாற்றத்திற்கு முக்கிய காரணமாகும், அதிமதுரத்தில் உள்ள கிளாப்ரிடின் கலவைகள் UV தடுப்பு என்சைம்களைக் கொண்டிருப்பதால் புதிய தோல் அணுவில் சேதம் ஏற்படாமல் தடுக்கிறது. கூடுதலாக, அதிமதுரப் பொடியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை ஆரோக்கியமான சரும அணுக்களை ஆக்ஸிஜனேற்றுவதிலிருந்து தடுக்கிறது மற்றும் சருமம் முன்கூட்டியே முதிர்ச்சியடைவதைத் தடுக்கிறது.
தழும்புகளை குணப்படுத்துகிறது
அதிமதுர சாற்றில் உள்ள சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் குணப்படுத்தும் செயல்முறையை விரைவுபடுத்துகிறது. இது வீக்கம் மற்றும் சிவத்தல் ஆகியவற்றைக் குறைக்கிறது மற்றும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடுகிறது. இதனால் சருமம் விரைவாக குணமடைகிறது. இவை மட்டுமல்ல, அதிமதுர பொடி சருமத்தில் நிறமிக்குக் காரணமான அமினோ அமிலமான மெலனின் உற்பத்தியைத் தடுக்கிறது. மெலனின் புற ஊதா கதிர் பாதிப்பிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது என்றாலும், அதிகப்படியான மெலனின் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். சூரிய ஒளியின் போது உற்பத்தி செய்யப்படும் அதிகப்படியான மெலனின் கருமையான வடுக்கள் மற்றும் தோல் புற்றுநோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
அழற்சியைக் குறைக்கிறது
அதிமதுரத்தின் இயற்கையான சரும தணிப்பு விளைவு அழற்சியைக் குறைக்க உதவுகிறது. கிளைசிரைசின் நிறைந்துள்ள அதிமதுரம் சிவத்தல், எரிச்சல் மற்றும் வீக்கம் ஆகியவற்றைக் குறைக்கும். இதனோடு, அடோபிக் டெர்மடைட்டிஸ் மற்றும் எக்ஸிமா போன்ற தோல் பிரச்சினைகளுக்கான சிகிச்சையில் உதவுகிறது.
கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
அதிமதுரம் உங்கள் கூந்தல் உதிர்வு பிரச்சினைகளுக்கு ஒரு நிச்சயமான இயற்கை தீர்வாகும். இந்த மூலிகைப் பொடியைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் உச்சந்தலையில் இரத்த ஓட்டம் மேம்படுகிறது மற்றும் மயிர்க்கால்களுக்கு முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதன் மூலம் வேர்களை வளர்ச்சியடைய செய்கிறது. இது கூந்தல் உதிர்வதைத் தடுக்கவும், முடியை நிலைநிறுத்தவும் உதவுகிறது, கூந்தலைப் பளபளப்பாகவும் வலுவானதாகவும் மாற்றுகிறது.
மேலும், அதிமதுரப் பொடியின் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு, பொடுகுத் தொல்லை மற்றும் உச்சந்தலையில் அரிப்பை ஏற்படுத்தும் பிற தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
பொறுப்புத் துறப்பு:
உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.