கண்ணாடியில் உங்களின் கருவளையங்களைப் பார்த்து, சங்கடப்படும் நபர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், கவலை வேண்டாம்! உங்கள் கருவளையங்களைப் போக்க உதவும் எளிய மற்றும் பயனுள்ள தீர்வுகள் உள்ளன. இந்த முறைகள் கருவளையங்களை மங்க செய்வதில் உதவுவதோடு மட்டுமல்லாமல், உங்கள் கண்களுக்குக் கீழும் சுற்றியும் உள்ள சருமத்திற்கு ஊட்டமளித்து இயற்கையான பளபளப்பை அளிக்கிறது.
கருவளையங்கள் ஏற்பட என்ன காரணம்?
- சரியான தூக்கமின்மை
- பரம்பரை
- மன அழுத்தம்
- வறண்ட சருமம்
- ஆரோக்கியமற்ற உணவு
- ஒப்பனைப் பொருட்களில் எரிச்சலூட்டும் பொருட்கள்
- வயதாவது
கருவளையங்களைத் தடுக்க எளிய வழிகள்
-
பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெய் என்பது கருவளையங்களை மங்க செய்வதற்கான ஒரு சரியான தீர்வாகும். பாதாம் எண்ணெயில் உள்ள வைட்டமின் E சருமத்தை புத்துயிர் பெறச் செய்கிறது மற்றும் அதன் வழக்கமான பயன்பாடு கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் மங்குவதற்கு உதவும். இது சருமத்தை மென்மையாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க பயன்படுத்தப்படுகிறது.
பாதாம் எண்ணெயை உங்கள் கருவளையங்களில் தடவி, சருமத்தில் மெதுவாக மசாஜ் செய்யவும். இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு மறுநாள் காலையில் கழுவவும்.
-
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் என்பது கருவளையங்களை நீக்க ஒரு இயற்கை தீர்வாக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்களான குக்குர்பிடாசின், வைடெக்சின், ஐசோஸ்கோபரின் மற்றும் வைட்டமின் சி மற்றும் கே ஆகியவை வீக்கம் மற்றும் கருவளையங்களை ஏற்படுத்தும் அழற்சியைக் குறைக்கின்றன. வெள்ளரிக்காய் கண்களிலும் அதைச் சுற்றியும் இரத்த ஓட்டத்தை தளர்த்தி மேம்படுத்துகிறது, மேலும் அதன் அஸ்ட்ரிஜென்ட் தன்மை சருமத்தை ஒளிரச் செய்கிறது.
இரண்டு கண்களிலும் குளிர்ந்த வெள்ளரிக்காய் துண்டுகளை வைத்து, 3 நிமிடங்களுக்கு ஒருமுறை புதிய துண்டுகளை மாற்றவும், சுமார் 20 நிமிடங்களுக்கு இந்தச் செயல்முறையைத் தொடரவும்.
-
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களை அகற்ற உதவும் இயற்கையான ப்ளீச்சிங் ஏஜென்டுகளாகும். வைட்டமின் C, A, மற்றும் நொதிகளின் செறிவூட்டல் கண்களைச் சுற்றியுள்ள சருமத்தைப் புத்துணர்ச்சியுடனும் ஊட்டத்துடனும் வைத்திருக்க உதவுகிறது.
உருளைக்கிழங்கை நறுக்கி உங்கள் கண்களின் மேல் வைத்து, 10-15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு குளிர்ந்த நீரில் கழுவவும். சில வாரங்களுக்கு தினமும் இரண்டு முறை இவ்வாறு செய்யவும்.
-
ரோஸ் வாட்டர்
ரோஸ் வாட்டர் கண்களுக்குக் கீழே உள்ள அழுத்தமான சருமத்தை அமைதிப்படுத்துகிறது. அதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சரும செல்களை வலுப்படுத்தி புதுப்பிக்கின்றன. அஸ்ட்ரின்ஜென்ட் ரோஸ் வாட்டர் சரும நிறத்தைத் தக்கவைத்து புத்துயிரூட்டுகிறது.
காட்டன் பேட்களை தூய ரோஸ் வாட்டரில் ஊறவைத்து உங்கள் கண் இமைகளில் 15 நிமிடங்கள் வைக்கவும். சில வாரங்களுக்கு தினமும் இரண்டு முறை இவ்வாறு செய்யுங்கள்.
-
தக்காளி
தக்காளியில் உள்ள இயற்கையான ப்ளீச்சிங் பண்பு சருமத்தை ஒளிரச் செய்கிறது. தக்காளியில் ஆன்டிஆக்ஸிடன்டான லைகோபீன் கண்களுக்குக் கீழே உள்ள கருமையைக் குறைக்க உதவுகிறது. வைட்டமின்கள் A, B, மற்றும் C சல்ஃபர், பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்களும் நிறைந்த தக்காளி, கருவளையங்களைக் குறைக்க சிறந்த தேர்வாகும்.
தக்காளி சாற்றை கருவளையங்களில் தடவி 10 நிமிடங்கள் அப்படியே விட்டு, தண்ணீரில் கழுவவும். சில வாரங்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை இதை செய்யவும்.
-
வைட்டமின் E எண்ணெய்
கருவளையங்களை மறைப்பதற்கான சிறந்த உட்பொருட்களில் ஒன்று வைட்டமின் E. இது எண்ணெயாகவும் மற்றும் ஜெல் பேஸ் காப்ஸ்யூலாகவும் கிடைக்கிறது. பலதரப்பட்ட நன்மைகள் நிறைந்த இவை இரண்டும் கருவளைய கண்களுக்கு அதிசயங்களைச் செய்கின்றன. எண்ணெயை இரவில் நேரடியாகத் தடவலாம், மேலும் காப்ஸ்யூலை பிழிந்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து உங்கள் விரலால் மசாஜ் செய்து, இரவு முழுவதும் அப்படியே விடலாம்.
-
தேநீர் பைகள்
குளிர்ச்சியான கிரீன் டீ பைகளை கண்களுக்குக் கீழே வைத்து மென்மையாக அழுத்துவது, வீக்கத்தை நீக்குவதோடு கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களை மங்க செய்யும். இந்த வீட்டு வைத்தியத்திற்கு, கிரீன் டீ பைகள், கெமோமில் டீ பைகள் அல்லது தண்ணீரில் நனைத்த கருப்பு தேநீர் பைகளைப் பயன்படுத்தி அவற்றை இரவு முழுவதும் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். காலையில் ஒவ்வொரு கண்ணிலும் மெதுவாகத் தடவவும்.
-
குளிர்ந்த பால்
கருவளையங்களைப் போக்க மற்றொரு எளிய வழி பாலைப் பயன்படுத்துவது. பாலில் சருமத்தை ஒளிரச் செய்யும் பண்புகள் உள்ளன. படுத்துக்கொண்டு, குளிர்ந்த பாலில் நனைத்த பருத்தி அல்லது சுத்தமான துவைத்த துணியை உங்கள் கண்களின் மீது சுமார் 15 நிமிடங்கள் வைக்கவும். சுமார் 10 நிமிடங்கள் வைத்து, சாதாரண நீரில் கழுவவும். அற்புதமான பலன்களைப் பெற ஒரு மாதத்திற்கு இதைச் செய்யுங்கள்.
பொறுப்புத் துறப்பு:
உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.