நீங்கள் வீட்டை குழந்தைக்கு அடிபடாதவாறு மாற்றிவிட்டீர்கள், ஃபீடிங் சேர் வைக்கப்பட்டுவிட்டது, இப்போது உங்கள் குழந்தை தனது முதல் திட உணவை சுவைக்க காத்திருக்கிறீர்கள். ஆனால் உங்களுக்குத் தெரியுமா? குழந்தையின் முதல் உணவு வயிற்றை நிரப்புவதற்காக மட்டுமல்ல, அவர்களின் எதிர்கால தோல் ஆரோக்கியத்திற்கும் அடிப்படையாக அமைகின்றன. ஆம், பிரகாசமான தோல் என்பது பெரியவர்கள் பயன்படுத்தும் அழகு பராமரிப்பு முறைகளினால் ஏற்படுவது அல்ல. மென்மையான, ஒளிரும் தோலின் ரகசியம் குழந்தைப் பருவத்திலேயே துவங்குகிறது — அதுவும் உங்கள் குழந்தைக்கு வழங்கும் முதல் உணவிலிருந்தே துவங்குகிறது.
Baby first food

இந்தப் பதிவில், குழந்தையின் தோலுக்கு ஏற்ற முதல் உணவுகளைப் பார்ப்போம். இதில் தோலுக்கு தேவையான வைட்டமின்கள், கனிமங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், நல்ல கொழுப்புகள் அடங்கியுள்ளன. எனவே, உங்கள் குழந்தை 6 மாத வயதில் திட உணவுகளைத் தொடங்கியிருக்கட்டும் அல்லது தோலை இயற்கையாக ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்புகிறீர்கள் என்றாலும், இந்த உணவுகள் குறித்து ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்து கொள்ள வேண்டும்!

தோல் ஆரோக்கியம் ஏன் குழந்தையின் உணவிலிருந்தே துவங்குகிறது?

டயப்பர் க்ரீம்கள், பேபி லோஷன்கள் வெளியிலிருந்து செயலில் ஈடுபட்டாலும், உண்மையில் தோல் உள்ளிருக்கும் உடல்நிலையை பிரதிபலிக்கிறது. A, C, E போன்ற முக்கிய வைட்டமின்களும், அவசியமான கொழுப்பு அமிலங்களும் குறைந்தால் தோல் வறட்சி, சோர்வு, அழற்சி ஏற்படும். ஆனால் இந்த சத்துக்களை கொண்ட உணவுகளை தாய்ப்பாலை நிறுத்தும் கட்டத்தில் கொடுத்தால், அது நோய் எதிர்ப்பு சக்தி, வளர்ச்சி மட்டுமல்லாமல் — ஆரோக்கியமான, மென்மையான, ஒளிரும் தோலுக்கான அடித்தளமாக இருக்கும்.

குழந்தையின் தோலை இயற்கையாக ஒளிரச் செய்யும் 8 சிறந்த உணவுகள்
Food for babies

1. அவகாடோ

ஆரோக்கியமான மோனோசாட்சுரேட்டட் கொழுப்பு, வைட்டமின் E, B-காம்ப்ளக்ஸ் நிறைந்தவை. தோல் செல்ல்களுக்கு ஊட்டமளித்து ஈரப்பதத்தைக் காத்துக்கொள்ள உதவுகிறது.

எப்படி கொடுக்கலாம்?
பழுத்த அவகாடோவை மசித்து, தாய்ப்பால் அல்லது ஃபார்முலாவுடன் கலந்து கொடுக்கலாம்.

2. சர்க்கரைவள்ளிக் கிழங்கு

பீட்டா கரோட்டீன் நிறைந்தது. இது வைட்டமின் A-வின் மூலமாக இருந்து தோலை சரிசெய்து, ஒளிர செய்கிறது.

எப்படி கொடுக்கலாம்?
ஆவியில் வேக வைத்து, மசித்து க்ரீமியான ப்யூரியாக கொடுக்கலாம்.

3. புளூபெர்ரி

வைட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. கொலாஜென் உருவாக்கத்தையும், தோல் பாதுகாப்பையும் உறுதிசெய்கின்றன. (8–9 மாதங்களுக்கு பிறகு கொடுக்க துவங்கவும்).

எப்படி கொடுக்கலாம்?
சிறிது ஆவியில் வேகவைத்து, மசித்து தயிருடன் கலந்து கொடுக்கலாம்.

4. காரட்

பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் A நிறைந்தவை. தோல் செல்களை புதுப்பிக்கவும் ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும்.

எப்படி கொடுக்கலாம்?
வேகவைத்து, ப்யூரியாக செய்து அல்லது சர்க்கரைவள்ளிக் கிழங்குடன் சேர்த்து கொடுக்கலாம்.

5. ஓட்ஸ்

ஸிங்க் மற்றும் வைட்டமின் E நிறைந்துள்ளது. தோல் அரிப்பையும் சென்சிட்டிவிட்டியையும் குறைக்க உதவுகிறது. ஜீரணத்திற்கும் நல்லது — அது நேரடியாக தோலின் ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்டிருக்கிறது.

எப்படி கொடுக்கலாம்?
பாலோடு அல்லது தண்ணீரோடு வேகவைத்து, கஞ்சி போல செய்து கொடுக்கலாம். வாழைப்பழம்/ஆப்பிள் மசித்து சேர்க்கலாம்.

6. பூசணிக்காய் 

வைட்டமின் A, C, E, ஸிங்க் நிறைந்துள்ளது. தோலை சரிசெய்து, அழற்சியைக் குறைத்து, ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவும்.

எப்படி கொடுக்கலாம்?
ஆவியில் வேகவைத்து மசிக்கவும் அல்லது roast செய்து ப்யூரியாக்கவும். (8 மாதங்களுக்கு மேல் இருந்தால் சிறிது பட்டை தூள் சேர்க்கலாம்).

7. முட்டையின் மஞ்சள் கரு

அலர்ஜி அபாயம் இல்லையெனில், 6–7 மாதத்திற்கு பின் முட்டையின் மஞ்சள் கருவைச் சேர்க்கலாம். பயோட்டின், ஸிங்க், ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை உள்ளதால் தோல் அமைப்பு மேம்படும்.

எப்படி கொடுக்கலாம்?
கொதிக்க வைத்து, மஞ்சளை மட்டும் எடுத்து தாய்ப்பால்/தண்ணீருடன் ப்யூரியாக்கி கொடுக்கவும்.

8. தண்ணீர்

உணவல்ல என்றாலும், தண்ணீர் தோலின் ஈரப்பதத்துக்கு அவசியம். 6 மாத வயதில் solids தொடங்கிய பின் சிறிது தண்ணீர் கொடுக்க தொடங்கலாம்.

எப்படி கொடுக்கலாம்?
கொதிக்கவைத்து குளிரவைத்த தண்ணீரை sippy cup-ல் கொடுக்கவும்.
baby food

குழந்தையின் தோலை இயற்கையாக பாதுகாக்க சில குறிப்புகள்

  • சூரியக் கதிர் பாதுகாப்பு: தொப்பி, உடை பயன்படுத்தவும்; அதிக சூரிய வெப்பத்திலிருந்து தவிர்க்கவும்.
  • மென்மையான கழுவுதல்: வாசனை இல்லாத, மென்மையான க்ளென்சர்களைப் பயன்படுத்தவும்.
  • ஈரப்பதம்: திட உணவுடன் சேர்த்து தாய்ப்பால்/ஃபார்முலாவைப் போதுமான அளவில் கொடுக்கவும்.

முடிவு

மென்மையான, ஒளிரும் தோல் என்பது வெளியில் பூசும் கிரீம்களாலோ, லோஷன்களாலோ மட்டும் வராது. உங்கள் குழந்தைக்கு தரும் உணவிலிருந்தே அது துவங்குகிறது. அவகாடோ, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, புளூபெர்ரி, ஓட்ஸ் போன்ற தோலுக்கு நன்மை தரும் உணவுகளை முதலிலிருந்தே கொடுத்தால், உங்கள் குழந்தை ஆரோக்கியமாக வளர்ந்து, மென்மையான, பிரகாசமான தோலை பெறும்.

ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள் என்பதால், இந்த உணவுகளை மெதுவாக அறிமுகப்படுத்தி, அலர்ஜி/சென்சிட்டிவிட்டி உள்ளதா என கவனியுங்கள். சத்தான உணவு, போதுமான தண்ணீர், மென்மையான பராமரிப்பு, அன்பு — இவை சேர்ந்து உங்கள் குழந்தை உள்ளும் புறமும் ஒளிரும், ஆரோக்கியமாக வளரும்.

பொறுப்புத் துறப்பு:

உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.